AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: இலங்கைக்கு எதிரான டெஸ்ட்.. அதிக ரன்கள் எடுத்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள்!

Top Run Scorers against Sri Lanka: நீண்ட நாட்களுக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அதேநேரத்தில், சாய் சுதர்ஷன் விளையாடுவது உடற்தகுதி அனுமதியைப் பொறுத்தே அமையும். கீழ்வரிசை பேட்டிங்கை வலுப்படுத்தக்கூடிய புதிய வீரரான சரன்ஷ் ஜெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

IND vs SL: இலங்கைக்கு எதிரான டெஸ்ட்.. அதிக ரன்கள் எடுத்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள்!
சச்சின் டெண்டுல்கர் - சேவாக் - விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Aug 2026 21:59 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) அடுத்த சுற்றுப்பயணம் இலங்கைக்கு நடைபெறுகிறது, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும். சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில், இந்த தொடரில் கட்டாயம் வெற்றி பெறுவது முக்கியம். நீண்ட நாட்களுக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அதேநேரத்தில், சாய் சுதர்ஷன் விளையாடுவது உடற்தகுதி அனுமதியைப் பொறுத்தே அமையும். கீழ்வரிசை பேட்டிங்கை வலுப்படுத்தக்கூடிய புதிய வீரரான சரன்ஷ் ஜெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 5 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இலங்கை சுற்றுப்பயணம்.. பும்ராவிற்கு பதிலாக இந்த ரஞ்சி நட்சத்திரத்திற்கு வாய்ப்பு..!

சச்சின் டெண்டுல்கர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். சச்சின் 25 போட்டிகளில் 36 இன்னிங்ஸ்களில் 1995 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 203 ஆகும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சச்சின் இதுவரை 9 சதங்களையும் 6 அரை சதங்களையும் அடித்துள்ளார்.

ராகுல் டிராவிட்:

முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். டிராவிட் 20 டெஸ்ட் போட்டிகளில் 32 இன்னிங்ஸ்களில் 1508 ரன்கள் எடுத்தார். இதில், 3 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை அடித்தார். ராகுல் டிராவிட் இலங்கைக்கு எதிராக எடுத்த 177 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

விரேந்தர் சேவாக்:

முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான விரேந்தர் சேவாக், இலங்கைக்கு எதிரான 11 டெஸ்ட் போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் உட்பட 1239 ரன்கள் எடுத்தார். இலங்கைக்கு எதிராக சேவாக்கின் அதிகபட்ச ஸ்கோர் 293 ஆகும். இதன் மூலம் சேவாக் மற்றொரு முச்சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

முகமது அசாருதீன்:

முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். 1985 முதல் 1999 வரை, இலங்கைக்கு எதிராக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில், அசாருதீன் 23 இன்னிங்ஸ்களில் 1,215 ரன்கள் எடுத்தார். அசாருதீன் இலங்கைக்கு எதிராக 5 சதங்களையும் 4 அரை சதங்களையும் அடித்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 199 ஆகும். இதில் அவர் ஒரு ரன் வித்தியாசத்தில் இரட்டைச் சதத்தைத் தவறவிட்டார்.

விராட் கோலி

ஐந்தாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி , தற்போது இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். இலங்கைக்கு எதிரான 11 டெஸ்ட் போட்டிகளில், 18 இன்னிங்ஸ்களில் கோலி 1085 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 243 ரன்களுடன், இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான சாதனையையும் கோலி கொண்டுள்ளார். சேவாக் (293) மட்டுமே அவரை விட முன்னிலையில் உள்ளார். கோலி, இலங்கைக்கு எதிராக 5 சதங்களையும் 2 அரை சதங்களையும் அடித்துள்ளார்.

ALSO READ: இந்திய அணிக்கு பும்ரா திரும்புவது எப்போது..? மருத்துவக்குழு கொடுத்த விளக்கம்!

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இது இந்தியாவின் மூன்றாவது தொடராகும். இதுவரை விளையாடிய 9 போட்டிகளில், இந்தியா 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும், ஒன்றில் சமனும் கண்டுள்ளது.

Follow Us