மீண்டும் தள்ளிப்போகும் ஜன நாயகன் சென்சார் விவகாரம்… ரிவைசிங் கமிட்டி பார்வை ஒத்திவைப்பு?
Jana Nayagan Movie Censor Update: தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான பிரச்னைகள் தொடர்ந்து இழுபறியாக உள்ள நிலையில் படத்தின் சென்சார் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்தப் படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இவர் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இனி படங்களில் நடிப்பதில் இருந்து விலகி முழு நேரமும் அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜன நாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்திற்கு சென்னார் சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு குறிப்பிட்ட நேரத்தில் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படக்குழு சென்சார் சான்றிதழ் வாங்க தொடர்ந்து நீதிமன்றத்தை நாடுவது, படத்தை ரிவைசிங் கமிட்டுக்கு அனுப்புவது என தொடர்ந்து மூன்று மதங்களாக முயற்சி செய்து வருகின்றது. ஒவ்வொரு முறையும் ஜன நாயகன் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்கள் வரும் போது எல்லாம் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.




மீண்டும் தள்ளிப்போகும் ஜன நாயகன் படத்தின் சென்சார் விவகாரம்:
இந்த நிலையில் படத்தை படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்து இருந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு ஜன நாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி ரிவைசிங் கமிட்டியில் உள்ள உறுப்பினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவர் வர முடியாத காரணத்தால் இன்று கமிட்டி படத்தை பார்க்க இருந்த நிகழ்வு மற்றொரு நாளிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… டைம் லூப் டிடெக்டிக் த்ரில்லர் படத்தில் நடிக்கும் சந்தானம்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan – The Revising Committee was supposed to watch the film at 2PM Today which was informed to the Producers through an email..✌️
But as per the reports, one of the committee members is said to be unwell and the plan is said to be changed to a later date..🤝 Another… pic.twitter.com/YOqi9tpOhI
— Laxmi Kanth (@iammoviebuff007) March 9, 2026
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் புருஷன் படத்தின் ஷூட்டிங்… BTS வீடியோவை வெளியிட்ட படக்குழு!