AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இருந்து வெளியேறிய ப்ளாக் பாண்டி – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட காமெடி நடிகர் ப்ளாக் பாண்டி தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இருந்து வெளியேறிய ப்ளாக் பாண்டி – வைரலாகும் வீடியோ
ப்ளாக் பாண்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2026 16:20 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் காமென் மேன்கள் என்று மொத்தம் 19 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். அதில் சீரியல் நடிகர்கள், வெள்ளித்திரை நடிகர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் என பலதரப்பட்ட மக்கள் இருந்தனர். இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த காரணத்திற்காகவே இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும் ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கும் நாள் ஒன்றிற்கு மொத்தம் மூன்று புரோமோ வீடியோக்கள் நிகழ்ச்சி குழு வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று மூன்றாவது நாளிற்கான புரோமோ வீடியோக்களை நிகழ்ச்சி குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய நாளிற்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இருந்து வெளியேறிய ப்ளாக் பாண்டி:

அதன்படி தற்போது வெளியான வீடியோவில் இந்த நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ப்ளாக் பாண்டி தற்போது வீட்டை விட்டு வெளியேறுவதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் மருத்துவரின் அறிவுறைப்படி ப்ளாக் பாண்டி தொடர்ந்து இந்த போட்டியில் விளையாட முடியாது என்பதால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… வீட்டு தலைவரை எதிர்க்கும் போட்டியாளர்கள்.. லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் நடந்த சம்பவம் – பிக் பாஸ் 10 2-வது நாளில் வெடித்த சண்டை!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மொதராத்திரி படத்தை பாராட்டி பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி – வைரலாகும் பதிவு

Follow Us