Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யோகி பாபு நடிப்பில் படம் இயக்கும் ரவி மோகன்.. ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Ravi Mohan Directorial Debut Movie Update பிரபல தமிழ் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன். சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் இவர் தயாரிப்பாளராகவும், படத்தைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளார். இதை அடுத்து அவர் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

யோகி பாபு நடிப்பில் படம் இயக்கும் ரவி மோகன்.. ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?
ரவி மோகன் மற்றும் யோகி பாபுImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 21 Aug 2025 18:56 PM

நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் காதலிக்க நேரமில்லை (Kadhalikka neramillai). இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 ஆம்  ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகி,  கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்தை அடுத்ததாகத் தனது கைவசத்தில் ஜீனி (Genie), ப்ரோகோட் (Bro Code), கராத்தே பாபு (Karathey babu) மற்றும் தனி ஒருவன் 2 என வரிசையாகப் படங்களை வைத்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளாகவும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் கீழ் ப்ரோகோட் என்ற படமானது உருவாகிவருகிறது. இந்நிலையில் இதை அடுத்து இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். நடிகர், தயாரிப்பாளர் என்பதையும் கடந்து தற்போது இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். இந்நிலையில், இந்த புதிய படத்தில் நாயகனாக நடிகர் யோகி பாபு (Yogi Babu) நடிக்கவுள்ளாராம். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என்பதைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!

யோகி பாபுவை வைத்து படம் இயக்கும் ரவி மோகன் :

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்பதையும் கடந்து , இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். இந்த இயக்குநர் அறிமுக குறித்து முன்பே அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதில் அவர் தன்னிடம் நல்ல கதை இருப்பதாகவும், யோகி பாபுவை வைத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் ரவி மோகனின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் நடிகர் யோகி பாபு புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இந்த படத்தின் அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம். இப்படத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படமானது நகைச்சுவை மற்றும் எமோஷனல் கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாம். இந்நிலையில், தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தோல்விகளால் எனது தந்தை சோர்வடைந்ததில்லை – ஸ்ருதி ஹாசன்!

நடிகர் ரவி மோகனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

நடிகர் ரவி மோகன் நடித்து வரும் புதிய படங்கள் :

நடிகர் ரவி மோகன், காதலிக்க நேரமில்லை என்ற படத்தைத் தொடர்ந்து, ஜீனி, கராத்தே பாபு மற்றும் ப்ரோகோட் என்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஜீனி படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் கராத்தே பாபு படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படம் இந்த 2025 அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ளதாம். மேலும் ப்ரோகோட் படத்தின் ஷூட்டிங் முதல் கட்டத்திலிருந்து வருகிறது. இதை அடுத்து தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்கிடையேதான் அவர் யோகி பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.