படப்பிடிப்பை தொடங்கியது சியான் 63 படக்குழு – வைரலாகும் போஸ்டர்
Chiyaan 63 Movie Shooting Update Is Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் 63-வது படமாக உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பை படக்குழு தற்போது தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வீர தீர சூரன் படம் வெளியானது. இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் விம்ரச்ன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் எந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் அவர் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதன்படி இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இயக்குநர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்க உள்ள இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சியான் விக்ரமுடன் இணைந்து நடிகை ரியா சிபு நடிக்க உள்ளார். இவர் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான சர்வம் மாயா படத்தின் மூலமாக பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.




படப்பிடிப்பை தொடங்கியது சியான் 63 படக்குழு:
இந்த சியான் 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அதனைப் படக்குழு தற்போது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ராமாயணா படம் குறித்து மனம் திறந்த நடிகை காஜல் அகர்வால்
சியான் 63 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Chiyaan63 – rolling with power and passion 🔥
Cooking begins with the one and only @chiyaan sir ❤️
A film by @anandshank, on floors now. Produced by @SathyaJyothi.@Music_Santhosh @riyashibu_ @RDRajasekar @arjun1on @saisiddharth_ @PoornimaRamasw1 @shankaruppusamy… pic.twitter.com/9wgyJd7bG9
— Sathya Jyothi Films (@SathyaJyothi) June 9, 2026
Also Read… Vijay Sethupathi: ஆக்ஷன் நாயகனாக விஜய் சேதுபதி.. வெளியானது ஸ்லம் டாக் பட டீசர்!