திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது ஓ…! சுகுமாரி படத்தின் டீசர்
Oh Sukumari Movie Tamil Teaser Out Now | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் உருவாகி உள்ள ஓ சுகுமாரி படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் நாயகியாக இவர் நடித்து இருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படம் தீயவர் குலை நடுங்க. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாக உள்ள ஓ சுகுமாரி படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.




வெளியானது ஓ…! சுகுமாரி படத்தின் டீசர்:
தெலுங்கு சினிமாவில் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ளது ஓ சுகுமாரி படம். இயக்குநர் பரத் தர்ஷன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக அவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் திருவீர் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… இயக்குநர் இமையத்திற்கு மரியாதை.. புதிய படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய சசிகுமார்!
ஓ சுகுமாரி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
You’re just hit by the Electrifying Entertainment ⚡🤩#OhSukumari TEASER OUT NOW 💥💥
Feel the Thrilling Fun on Big Screens Soon ❤️🔥@iamThiruveeR @aishu_dil @SS_bharath @MaheswaraMooli @RKushendar @Actor_Gavireddy @bharathmusic8 @9_vara5972 pic.twitter.com/jawSmJ4Yo4
— Gangaa Entertainments (@GangaEnts) June 13, 2026
Also Read… கராத்தே பாபு படத்திலிருந்து வெளியானது ராசாதி ராசன் பாடல்