AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விக்ராந்த் – ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் டைட்டிலை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்

Director Vetrimaaran Revealed Vikranth Movie Title: தமிழ் சினிமாவில் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் விக்ராந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படத்தின் டைட்டிலை இயக்குநர் வெற்றிமாறன் தற்போது வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ராந்த் – ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் டைட்டிலை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Feb 2026 14:49 PM IST

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தளபதி விஜயின் சித்தி மகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விக்ராந்த். இவர் கடந்த 1991-ம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியின் மகனாக நடிகர் விக்ராந்த் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான கற்க கசடர என்ற படத்தின் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவர் நடித்தப் போது ரசிகர்கள் தளபதி விஜயின் தம்பி என்று ஆர்வமுடன் பார்த்தது குறிப்பிடத்தக்கது. விஜயின் சாயலில் இருந்தாலும் இவருக்கு சினிமாவில் தொடக்க காலம் என்பது வெற்றிகரமாக இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து விக்ராந்த் நடிப்பில் பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் கலவையான விமர்சனத்தையேப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி வருகின்றது. இறுதியாக இவர் கன்னட சினிமாவில் நடிகர் கிச்சா சுதீப் உடன் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ராந்த் படத்தின் டைட்டிலை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்:

இந்த நிலையில் நடிகர் விக்ராந்த் அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ள படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகை விக்ராந்த் உடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் படத்தின் டைட்டிலை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். அதன்படி படத்திற்கு அண்டர் 18 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக உள்ளது.

Also Read… எஜமான் காலடி மண்ணெடுத்து… திரையரங்குகளில் வெளியாகி 33 ஆண்டுகளைக் கடந்தது எஜமான் படம்

நடிகர் விக்ராந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வேள்பாரி படத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்? சங்கரின் ப்ளான் என்ன