AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Allu Arjun: அல்லு அர்ஜுன் – அட்லீயின் ராக்கா பட ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!

Raaka Movie: டோலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நடித்துவரும் படம்தான் ரக்கா. இப்படம் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் உருவாகிவரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என ரசிகர்களால் கேட்கப்பட்டுவருகிறது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Allu Arjun: அல்லு அர்ஜுன் – அட்லீயின் ராக்கா பட ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!
ராக்கா திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Jun 2026 16:19 PM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அட்லீ குமார் (Atlee Kumar). இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தமிழில் தளபதி விஜயுடன் (Thalapathy Vijay) மட்டுமே கிட்டத்தட்ட 3 படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற சிறப்பான கதைகளை இயக்கி பெரிய இயக்குநராக புகழ்பெற்றிருந்தார். இதையடுத்து இவர் பாலிவுட் சினிமா பக்கம் சென்ற நிலையில், ஷாருக்கானை வைத்து ஜவான் (Jawan)என்ற படத்தை இயக்கியிருந்தார். இதுவும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் தெலுங்கில் இயக்குநராக நுழைந்துள்ள நிலையில், அல்லு அர்ஜுனின் (Allu Arjun) ராக்கா (Raaka) படத்தை இயக்கிவருகிறார். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுவருகிறது.

இப்படத்தின் ஷூடிங் முழுக்க வெளிநாடுகளில் நடப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்துவருகிறார். இப்படமானது 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ

அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ரிலீஸ்:

அல்லு அர்ஜுனின் ராக்கா படமானது கிட்டத்தட்ட பான் இந்திய திரைப்படமாக தயாராகிவருகிறது. ஹாலிவுட் பட ரேஞ்சில் இப்படமானது உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இதன் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான வேடத்தில் நடித்துவரும் நிலையில், அவருடன் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: சர்தார் 2 படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலானது – மாளவிகா மோகனன் சொன்ன விஷயம்!

இப்படத்தில் இவர் பல ஆக்ஷன் காட்சியில் நடிக்கிறாராம். தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அந்த காட்சிகளில் டூப் பயன்படுத்தி எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளாராம். இப்படம் 2027ம் ஆனது ஜனவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டுவிஸ்டாக அமைந்துள்ளது. இப்படமானது 2027ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என தற்போது இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ரிலீஸ் குறித்து வைரலாகும் பதிவு:

ராக்கா படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் தீப் பாடலான மேக் வே ஃபார் தி கிங் என்ற தீம் பாடல் வெளியாகியிருக்கிறது. தற்போது இப்பாடலும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us