வாக்குச்சாவடிக்குள் போட்டோ, வீடியோ எடுக்ககூடாது.. மீறினால் சிறை தண்டனை..
Tamil Nadu Assembly Election: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் EVM பொத்தானை அழுத்தும் போது புகைப்படம் அல்லது காணொளி பதிவு செய்வது குற்றமாகும்.
சென்னை, ஏப்ரல் 23, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஜனநாயகத் திருவிழாவான இன்று, அனைத்து வாக்காளர்களும் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், வாக்களிக்கும் போது சில முக்கிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் முறையில் வாக்கு ரகசியம் மிக முக்கியமான அம்சமாகும்.
நோ வீடியோ, போட்டோ:
குறிப்பாக, வாக்குச்சாவடி மையத்திற்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) வாக்களிக்கும் போது, அதை புகைப்படம் எடுப்பதோ அல்லது வீடியோ பதிவு செய்வதோ சட்டப்படி குற்றமாகும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வாக்களிக்க சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பிக்கும் கிளாம்பாக்கம்..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிக்குள் EVM பொத்தானை அழுத்தும் போது புகைப்படம் அல்லது காணொளி பதிவு செய்வது குற்றமாகும்.
1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128, வாக்கு ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வாக்காளர் தாம் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை வெளிப்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படலாம்.
மேலும் படிக்க: நாளை நடக்கும் ஜனநாயக திருவிழா.. தலைமை செயலகத்தில் உயர் சிறப்பு கட்டுப்பாட்டு அறை..
3 மாதங்கள் வரை சிறை தண்டனை:
மேலும், இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இது அவர்களின் எதிர்கால வாக்களிக்கும் உரிமையையும் பாதிக்கக்கூடும். அதேபோல், விதிமீறலுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வாக்குச்சாவடி அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்துள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கூட தங்கள் வாக்குகளை பதிவு செய்ய நாடு திரும்பியுள்ளனர். வெளியூரில் பணிபுரியும் இளைஞர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. அதே சமயம், வாக்களித்த ரகசியத்தை பாதுகாப்பதும் அவசியம். எனவே, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒவ்வொருவரும் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.