வெப்பத்தைத் தாங்கும் தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை; சென்னையில் பயிலரங்கு தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்..
சென்னை மாநகரில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய வார்டுகளில் கடும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்க 'திட்ட மேலாண்மைப் பிரிவு' (PMU) அமைப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
ஜூலை 28, 2026: சென்னை கிண்டியில் “வெப்பத் தாங்கு திறன் கொண்ட தமிழ்நாட்டை நோக்கி” என்ற தலைப்பில் நடைபெற்ற வெப்ப அபாய மேலாண்மை பயிலரங்கை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, பேரிடர் மேலாண்மையில் முன்னெச்சரிக்கை, ஆயத்தநிலை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர்களிடம் முன்கூட்டியே நிதி இருப்பது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமைக்கு ரூ.50 கோடி சுழற்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ. 55 கோடி மதிப்பீட்டில் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம்:
தேவைக்கேற்ப இந்த நிதி மாவட்ட ஆட்சியர்களுக்கு உடனடியாக வழங்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 550 ‘ஆப்தா மித்ரா’ தன்னார்வலர்களும், 6,034 ‘யுவா ஆப்தா மித்ரா’ தன்னார்வலர்களும் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
மேலும் படிக்க: மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்..
அதேபோல், ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிறுவனம், பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கொள்கை ஆதரவு மற்றும் அறிவியல் புதுமைகளுக்கான மாநிலத்தின் தலைமை நிறுவனமாக செயல்படும்.
தமிழ்நாடு மாநில வெப்ப செயல் திட்டம் – 2026:
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை தயாரித்துள்ள ‘தமிழ்நாடு மாநில வெப்ப செயல் திட்டம் – 2026’, கடந்த ஜூன் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம் நாட்டிலேயே மிகவும் விரிவான வெப்ப செயல் திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த பயிலரங்கில், தமிழ்நாட்டிற்கான மாநில வெப்ப செயல் திட்டத்தை செயல்படுத்துவது, வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனுக்கான நிலையான குளிர்விப்பு மற்றும் வெப்பத் தாக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகள், வெப்பத்தைத் தாங்கும் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குதல், தீவிர வெப்பச் சூழலில் எரிசக்தி அமைப்பின் மீள்திறன் மற்றும் தேவை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வல்லுநர்கள் விரிவாக விவாதித்தனர்.
மேலும் படிக்க: தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம்: யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதல் இடம் – த.வெ.க விளக்கம்.
மேலும், தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மற்றும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), புனே ஆகியவற்றுக்கு இடையே நகர்ப்புற வானிலை ஆய்வு, தீவிர வானிலை பகுப்பாய்வு, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தொடர்பான ஆய்வுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வெப்பத்தை குறைக்க விரிவான திட்ட அறிக்கை:
அதேபோல், சென்னை மாநகரில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய வார்டுகளில் கடும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்க ‘திட்ட மேலாண்மைப் பிரிவு’ (PMU) அமைப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் (DDGM) வருடாந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டதுடன், தினசரி வானிலை முன்னறிவிப்பு சேவைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.