AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு ஓட்டு..ஒரு விரல்..ஒரு புரட்சி.. ஒரே ஒரு நாள்… சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு

Nooru Saami Movie Team Release New Poster: தமிழ் நாட்டில் நாளை 23-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜயின் கட்சி உட்படல பழம்பெரும் கட்சிகள் பல போட்டியிட உள்ளனர். இதனை முன்னிட்டு நூறு சாமி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு ஓட்டு..ஒரு விரல்..ஒரு புரட்சி.. ஒரே ஒரு நாள்… சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு
நூறு சாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Apr 2026 22:02 PM IST

தமிழ் நாடு மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 5 வருடங்களுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடைபெறும் போது அந்த தேர்தலில் வாக்கு செலுத்துவதின் முக்கியதுவம் குறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 23-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நாளை தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சியினர் மட்டும் இன்றி சுயேற்சை வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர்.

தொடர்ந்து பிரச்சாரங்கள் நிறைவடைந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ் சினிமாவைச் சார்ந்த பிரபலங்கள் உட்பட பலர் தாங்கள் ஆதரிக்கும் கட்சியினர் குறித்தும், வாக்கு செலுத்துவதின் கடமையையும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் நூறு சாமி படக்குழுவினரும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு:

இயக்குநர் சசி எழுதி இயக்கும் படம் நூறு சாமி. நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் நிலையில் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை நடிகர் விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிக்கின்றது. இந்த நிலையில் தற்போது தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியதுவம் குறித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஓட்டு..ஒரு விரல்..ஒரு புரட்சி.. ஒரே ஒரு நாள்! என்று தெரிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சம்மர் வெக்கேஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சு… குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான இந்த ஃபைண்டிங் நீமோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்

நூறு சாமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Karthi: நா லவ் பண்ணக்கூடாதுனு வீட்ல மிரட்டுனாங்க.. நடிகர் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Follow Us