AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு சூரியன் சுட்டெரிக்கும்… – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Weather Update : தமிழ்நாடு முழுவதும் மார்ச் 5 மற்றும் 6.  2026 இன்றும், நாளையும் வெப்ப நிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப நிலை படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு சூரியன் சுட்டெரிக்கும்… – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Mar 2026 07:54 AM IST

சென்னை, மார்ச் 5 : தமிழ்நாடு முழுவதும் மார்ச் 5 மற்றும் 6.  2026 இன்றும், நாளையும் வெப்ப நிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி மார்ச் 5, 6 2026 ஆகிய 2 நாட்களுக்கும் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

2 நாட்களுக்கு அதிகரிக்கும் வெப்ப நிலை

தமிழகம் முழுவதும் மார்ச் 5, 2026 இன்றும் மார்ச் 6, 2026 நாளையும் வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்ட இரண்டு நாட்களும் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மக்களே உஷார் … தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக உயரும்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 5, 6 2026 ஆகிய 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மார்ச் 7, 2026 முதல் மார்ச் 10, 2026 வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கோடையில் வெப்பப் பக்கவாதம், நீரிழப்பைத் தவிர்க்க வேண்டுமா?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 5, 2026 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  மேலும், அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மார்ச் 5, 2026 அன்று அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். அதேபோல் மார்ச் 6, 2026 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us