உங்கள் திறமையில் 10 சதவீதம் எனக்கு வேண்டும் – இயக்குநர் வெங்கி அட்லூரி
Director Venky Atluri talks about Dhanush talent: தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் கர படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய போது நடிகர் தனுஷின் திறமையில் 10 சதவீதம் தனக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கிய இவர் தமிழ் சினிமாவில் வாத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி தெலுங்கு சினிமாவில் இயக்கியப் படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லக்கி பாஸ்கர்.
நடிகர் துல்கர் சல்மான் நாயகனக நடித்த இந்தப் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். நடிகர் சூர்யா நாயகனாக நட்டித்து உள்ள இந்தப் படம் வருகின்ர ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




கர படத்தின் ப்ரீ ரிலீஸில் கலகலப்பாக உறையாடிய தனுஷ் – வெங்கி அட்லூரி:
இந்த நிலையில் கர படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் விழாவில் இயக்குநர் வெங்கி அட்லூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது வெங்கி அட்லூரி எனக்கு உங்களது திறமையில் 10 சதவீதம் தேவை என தனுஷிடம் கூறினார். அதற்கு தனுஷ், அவ்வளவு பணிவாக நடிக்காதீர்கள். நீங்கள் தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களையும், சிறந்த நடிப்பையும் வழங்கியிருக்கிறீர்கள். நடிப்புப் பொறுப்பை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் இயக்குவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்,” என்று கூறினார்.
உடனே வெங்கி அட்லூரி, ஒருவரால் எப்படி வெறும் 45 நாட்களுக்குள் ஒரு திரைப்படத்தை இயக்கி, அதை ஒரு ‘பிளாக்பஸ்டர்’ வெற்றியாக மாற்ற முடிகிறது? அதுவும் ஒருமுறை அல்ல, இரண்டு முறை… ஏன், மூன்று முறை கூட என்று வியப்புடன் குறிப்பிட்டார். அதற்கு தனுஷ், அந்தப் பெருமை முழுப் படக்குழுவையுமே சாரும். அது என்னிடம் மட்டும் இல்லை, என்று பதிலளித்தார்.
Also Read… Irandu Vaanam: வெள்ளிச்சுடரே… விஷ்ணு விஷால் – மமிதாவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
இணையத்தில் வைரலாகும் தனுஷ் – வெங்கி அட்லூரி பேச்சு:
#VenkiAtluri: I need 10% of your talent 😀#Dhanush: Don’t act too humble, you have given back to back blockbusters & acting. Acting job i will take care, you do only directing job😂#VenkiAtluri: How can a man direct a film in 45 days and give a blockbuster. Not once, but twice… pic.twitter.com/k7UQwmZosY
— AmuthaBharathi (@CinemaWithAB) April 26, 2026
Also Read… நீங்க தெரிஞ்சி பண்ணல… நானும் தெரிஞ்சி பண்ணல.. ஆனால் – கர படம் குறித்து தனுஷ் பேச்சு!