வியாட்நாம் கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து… 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் மரணம் – பரபரப்பு தகவல்
வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான 'பு குவோக்' தீவு அருகே ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. பல இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்நு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழர் உட்பட 15 இந்தியர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான பு குவோக்’ தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்தது. விபத்து நடந்த உடனேயே, உள்ளூர் வியட்நாமிய அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டனர். விரிவான மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, அதிகாரிகள் இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் விபத்துக்கான துல்லியமான காரணங்களையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வியட்நாமில் இந்தியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமான ‘பு குவோக்’ தீவு அருகே ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. பல இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்நு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழர் உட்பட 15 இந்தியர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த படகில் 24 இந்தியர்கள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 105 சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சென்றிருந்ததாகத் தெரியவருகிறது. அப்படகில் சுமார் 24 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த இருவர் பாதுகாப்பாக உள்ள நிலையில், மற்ற மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், அவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
8 தமிழர்கள் மரணம்
இந்த விபத்தில் 8 தமிழர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வியட்நாமில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பழனியை சேர்ந்த முருகபிரபு என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்றவர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா மொபைல் நிறுவனம் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சில மணி நேரங்களுக்கு முன்பு வியட்நாமின் பு குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர என்று உறுதிபடுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான மருத்துவ மற்றும் போக்குவரத்து உதவிகளை ஏற்பாடு செய்ய இந்தியத் தூதரகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசரத் தகவல்களுக்கு +84 36 281 7930, +84 91 552 37 14 மற்றும் +84 33 452 0414 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஹனோயிலும் மற்றொரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது; இதற்கான எண் +84 91 308 9165 ஆகும்.