40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு பயணம்… பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு… ஸ்டீவ் வாக்கிற்கு மறக்க முடியாத பரிசு
PM Modi : நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து நகரின் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் வரவேற்றார். இந்த பயணத்தின் போது, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கு பிரதமர் மோடி அளித்த பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நியூசிலாந்து சென்றுள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக கடந்த 1968 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற நிலையில், அவரைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்து சென்றிருந்தார். அவர்களுக்கு பிறகு நியூசிலாந்துக்கு செல்லும் 3வது இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து நகரின் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் வரவேற்றார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு அந்நாட்டு முறையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது, இரு தலைவர்களும் கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு இரு நாடுகளின் நட்புறவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆக்லாந்தின் புகழ்பெற்ற ஸ்கை டவரில் இந்திய தேசியக் கொடியின் மூவர்ண நிறம் ஒளிபரப்பப்பட்டது.
பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
Reached Auckland a short while ago. Thankful to Prime Minister Luxon for the welcome at the airport.
This visit is historic, being the first Prime Ministerial visit to New Zealand in four decades. I look forward to holding talks with Prime Minister Luxon and discussing the… pic.twitter.com/qhUfkaFfHF
— Narendra Modi (@narendramodi) July 10, 2026
பிரதமர் மோடியின் நியூசிலாந்து பயணத்தின்போது வர்த்தகம், முதலீடு, கல்வி, சுற்றுலா, விளையாட்டு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகழ்பெற்ற ஸ்கை டவரில் இந்திய தேசியக் கொடி
New Zealand | Auckland’s iconic sky tower lights up in the Indian tricolour as a special gesture for PM Narendra Modi’s visit
PM Modi arrived in New Zealand today on the final leg of his three-nation visit. pic.twitter.com/MPQXs4BGIn
— ANI (@ANI) July 10, 2026
சமீபத்தில் இந்தியா – நியூசிலாந்து இடையே கையெழுத்தான வணிக ஒப்பந்தம் இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், நியூசிலாந்தின் 95 சதவிகித ஏற்றுமதிப் பொருட்களுக்கு சுங்கவரி குறைக்கப்படவோ அல்லது முற்றிலும் நீக்கப்படவோ உள்ளது.
ஸ்டீவ் வாக்கிற்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பரிசு
PM Narendra Modi gifted Steve Waugh an almost 20 year old photo when the Cricketer had met him when he was the Gujarat CM. pic.twitter.com/TqAP7yO4MU
— ANI (@ANI) July 10, 2026
இந்த பயணத்தின் போது, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கு பிரதமர் மோடி அளித்த பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குஜராத் முதல்வராக இருந்த காலத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீவ் வாவ் மற்றும் மோடியும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படத்தை நினைவுப் பரிசாக மோடி வழங்கினார். அந்த பழைய புகைப்படத்தை பார்த்த ஸ்டீவ் வாவ் நெகிழ்ச்சியடைந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சந்திப்பை பிரதமர் மோடி நினைவில் வைத்திருந்தது அவரை ஆச்சரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.