Viral Video : இந்தோனேசியாவில் ட்ரோன் மூலம் பயணம் செய்யும் விவசாயி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Indonesian Farmer Using Drone As A Transport | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ட்ரோனை போக்குவரத்துக்கு வாகனமாக பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ட்ரோன் (Drone) மூலம் பயணம் செய்வது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ட்ரோன் மூலம் பயணம் செய்யும் இந்தோனேசியா விவசாயி
தற்போதைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஏராளமான புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. விவசாயம் தொடங்கி, விஞ்ஞானம் வரை அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த வகையில், விவசாயி ஒருவர் ட்ரோன் பயன்படுத்தி பயணம் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : ஆட்டோ ஓட்டுநருக்கு தனது லம்போர்கினியை ஓட்ட கொடுத்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Plantation workers in Indonesia are using a farming drone to transport themselves from the field to their vehicles about a mile away.
The flights are reportedly taking place in Jombang Regency, East Java.
According to CNN, the drone costs about ,000.
Looks fun. pic.twitter.com/KGkzKFel97
— Collin Rugg (@CollinRugg) July 8, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ட்ரோன் ஒன்றில் கயிறு கட்டப்பட்டுள்ளது. அந்த கயிற்றில் விவசாயி தன் முதுகில் அணிந்திருக்கும் பெல்டை இணைத்துள்ளார். இந்த நிலையில் அந்த ட்ரோன் விவசாயியை தூக்கிக்கொண்டு பரக்கிறது. அவர் தான் செல்ல வேண்டிய இடம் வந்ததும், ட்ரோனை இறக்கி கீழே இறங்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : எம்பயர் ஸ்டேட் கட்டட ப்ரொபோசலை ரீகிரியேட் செய்ய முயன்ற பீகார் ஜோடி.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் விவசாயியை பாரட்டியும், சிலர் அதில் இருக்கும் ஆபத்துகள் குறித்தும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.