AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேடையிலேயே கண்ணீர் விட்ட விஜய்.. பணி ஆணை வழங்கும் நிகழ்வில் அரங்கேறிய சோக காட்சி!

CM Vijay Emotional About Karur Stampede : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அரசுப் பணிக்கான ஆணை வழங்கிய போது பயனாளிகளிடம் கண் கலங்கி பேசியதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

மேடையிலேயே கண்ணீர் விட்ட விஜய்.. பணி ஆணை வழங்கும் நிகழ்வில் அரங்கேறிய சோக காட்சி!
கண்கலங்கிய முதல்வர் ஜோசப் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Jul 2026 18:42 PM IST

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவை கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு பணி ஆணை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று முதல்வர் ஜோசப் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நபர்களுக்கு அரசு பணிக்கான ஆணைகளை வழங்கினார். அப்போது, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைத்து விஜய் கண்கலங்கியதாக தகவல் வெளியானது. இதே போல, பணி நியமன ஆணைகளை பெற வந்த பயனாளிகளும் மேடையில் கண்கலங்கினர். உடனே, முதல்வர் விஜய் பயணிகளுக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார். இதேபோல, பயனாளிகளும் முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அந்த நிகழ்வில் நெகிழ்ச்சியாக அமைந்தது.

முதல்வர் கண் கலங்கியது குறித்து பயனாளிகள் கருத்து

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பயனாளிகள் கூறுகையில், மேடையில் பணி நியமன ஆணைகளை பெற சென்ற போது கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தை நினைவு கூர்ந்து நாங்களும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினோம். இதே போல, முதல்வர் விஜய் அவர்களும் கண்கலங்கினார். பணி நியமன அணை வழங்கும்போது கரூர் சம்பவம் தொடர்பாக வருத்தப்பட்டு பேசினார். எனக்கு வீடு இல்லை என்பது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் வீடு ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.

மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கத் தடையில்லை.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உதவி

மேலும், பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்வதாக தெரிவித்துள்ளார்.  மேலும், அரசு பணியை பெற மறுத்தவர்களிடம் அதற்கான காரணத்தை முதல்வர் ஜோசப் விஜய் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, அவராலும் எதுவும் பேச முடியவில்லை. எங்களாலும் எதுவும் பேச முடியவில்லை என்று தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் பரப்புரை பயணம் மேற்கொண்டு இருந்தார்.

31 பேருக்கு அரசு பணி ஆணை அளிப்பு

அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி குழந்தை, பெண்கள் உள்பட சுமார் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு, தமிழக வெற்றி கழகம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசுப் பணிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், 31 குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

மேலும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!

Follow Us