AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அரசு வேலைக்கான ஆணை அளிப்பு… முழு விவரம்!

CM Vijay Government Job Order Issue: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேருக்கு அரசு பணி ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார். இதில், யார் யாருக்கு என்னென்ன பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அரசு வேலைக்கான ஆணை அளிப்பு… முழு விவரம்!
அரசு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Jul 2026 16:28 PM IST

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, கரூரில் மக்கள் சந்திப்பு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் விஜய் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை வழங்கினார். இதில், 31 பேரை தவிர்த்து ஒருவருக்கு மட்டும் ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது, அரசு பணி ஆணை பெற்ற நபர்கள் யார். அவர்களுக்கு என்னென்ன அரசு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பன விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு புதிய கோட்டை.. சென்னையில் அமைகிறது பிரம்மாண்ட தலைமையகம்!

31 பேரில் யார் யாருக்கு அரசுப் பணி

  • ஆனந்த ஜோதி- இளநிலை உதவியாளர் பள்ளிக் கல்வித் துறை கரூர் மாவட்டம்.
  • நிவேதிதா – இளநிலை உதவியாளர் பள்ளிக் கல்வித்துறை திருப்பூர் மாவட்டம்.
  • கலைச்செல்வி -அலுவலக உதவியாளர் மாவட்ட வருவாய் அலகு கரூர் மாவட்டம்.
  • சதீஷ்குமார் – அலுவலக உதவியாளர் மாவட்ட வருவாய் அலகு கரூர் மாவட்டம்.
  • டேனியல் – அலுவலக உதவியாளர் மாவட்ட வருவாய் அலகு கரூர் மாவட்டம்.
  • சங்கிலி -இளநிலை உதவியாளர் பள்ளிக் கல்வித்துறை கரூர் மாவட்டம்.
  • கிருஷ்ணமூர்த்தி -இளநிலை உதவியாளர் பள்ளிக் கல்வித் துறை.
  • மோனிஷா -இளநிலை உதவியாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை.
  • மகாலட்சுமி -இளநிலை உதவியாளர் காவல்துறை.
  • தனலட்சுமி -இளநிலை உதவியாளர் காவல்துறை.
  • முருகன் -அலுவலக உதவியாளர் கரூர் மாவட்ட அலகு
  • பிரபாகரன் -இளநிலை உதவியாளர் பதிவுத்துறை.
  • ஷர்மிளா -இளநிலை உதவியாளர் பதிவுத்துறை.
  • சந்தியா -இளநிலை உதவியாளர் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை.
  • ஜெயபிரகாஷ்- இளநிலை உதவியாளர்- திருப்பூர் ஊரக வளர்ச்சித் துறை.
  • தீபலட்சுமி இளநிலை உதவியாளர்- ஊரக வளர்ச்சி துறை.
  • மல்லிகா- இளநிலை உதவியாளர்- திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை.
  • ஜோதி- இரவு காவலர் சேலம் உண்டு உறைவிட பள்ளி.
  • பிரியதர்ஷினி- இளநிலை உதவியாளர்- ஊரக வளர்ச்சித்துறை.
  • சக்திவேல்- இளநிலை உதவியாளர் பள்ளிக் கல்வித் துறை.
  • யோகேஷ் குமார்- இரவு காவலர் வருவாய்த்துறை.
  • விமல்- அலுவலக உதவியாளர்.
  • சங்கவி- இளநிலை உதவியாளர் பள்ளிக் கல்வித் துறை.
  • திவ்யா- இளநிலை உதவியாளர்.
  • செல்வராணி- மசால்ஜி.
  • கிருஷ்ணமூர்த்தி- இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

ரூ.10 லட்சத்துக்கான காசோலை

இதில், கல்வி தகுதியின் அடிப்படையில் 3 பெயருக்கு இரவு காவலாளி பணி வழங்கப்பட்டுள்ளது. உண்டு உறைவிட பள்ளி, காவல் நிலையம் உள்ளிட்ட துறைகளில் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஈரோட்டை சேர்ந்த சாந்தி என்பவரது குடும்பத்தை சேர்ந்தவருக்கு கல்வி தகுதி இல்லாத நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்காமல் ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ட்ரிங்க்ஸ்.. பாலுடன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ்.. இனி தினமும் ஹேப்பி தான்!

Follow Us