AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold and Silver Price Increased | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளது. தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Jul 2026 10:29 AM IST

சென்னை, ஜூலை 15 : கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஜூலை 15, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

புவிசார் பதற்றம், பணவீக்கம், பங்குச்சந்தை உள்ளிட்டவை தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. ஈரான் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக புவிசார் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : Gold Price : தீபாவளியின்போது ஒரு கிராம் தங்கம் ரூ.20,000-க்கு விற்பனை?.. வெளியான ஷாக் தகவல்!

ஜூன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாத தொடக்கத்தில் சில நாட்கள் உயர்வை சந்தித்தது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை சரிய தொடங்கியது. இந்த நிலையில் தான் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தொடர் சரிவை சந்திக்கும் பட்சத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஜூலை 15, 2026) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,180-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.249-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us