AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. அதிரடி விளக்கம்!!

TVK viral video controversy: தவெக நிர்வாகி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. சாலைப் பணிக்கான பில்லை பாஸ் செய்ய ரூ.1.30 லட்சம் கைமாறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், "அது லஞ்சம் அல்ல, நான் கொடுத்த கடன் தொகையைத் தான் திரும்பப் பெற்றேன்" என்று தவெக நிர்வாகி வீரா விளக்கமளித்துள்ளார்.

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. அதிரடி விளக்கம்!!
லஞ்சம் பெறும் தவெக நிர்வாகி?
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Jul 2026 11:41 AM IST

செங்கல்பட்டு, ஜூலை 15: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளார். தான் வாங்கிய பணம் லஞ்சம் அல்ல என்றும், தான் கொடுத்த கடனைத் தான் திரும்பப் பெற்றேன் என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் கூடுதல் விவரங்களுடன் கூடிய விரிவான செய்தியை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க : 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவெடுத்த தந்தை – மனைவியின் வீட்டில் நடந்த சோகம்

சர்ச்சைக்குரிய வீடியோவின் பின்னணி:

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருபவர் வீரா. இவரது அலுவலகத்தில் வைத்து ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பணப் பரிவர்த்தனை நடப்பது போன்ற வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவியது. அந்த வீடியோவில், சாலைப் பணிக்கான பில்களை நிறைவேற்றித் தருவதற்காக ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை தவெக நிர்வாகி வீரா லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் ரூ.30,000, ரூ.50,000 எனப் பல தவணைகளில் பணம் அனுப்பப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்களும், அலுவலகத்தில் பில்கள் மற்றும் கமிஷஔஔன் குறித்துப் பேசும் உரையாடல்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்ததால், இது அரசியல் வட்டாரத்தில் தவெக கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

அது லஞ்சம் அல்ல, கடன் தொகை:

இந்த லஞ்சப் புகார் மற்றும் வீடியோ சர்ச்சை குறித்து மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீரா தற்போது தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது போல, நான் எந்தவொரு திட்டப் பணிக்காகவும் லஞ்சம் பெறவில்லை. ஒப்பந்ததாரருக்கும் எனக்கும் இடையே ஏற்கனவே இருந்த பணப் பழக்கத்தின் அடிப்படையில் நான் அவருக்கு வழங்கியிருந்த கடன் தொகையைத் தான் அவர் தற்போது என்னிடம் திருப்பிச் செலுத்தியுள்ளார். அதைத் தவறான கோணத்தில் சித்தரித்து லஞ்சம் வாங்கியதாக வதந்தி பரப்பியுள்ளனர்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட விசாரணைக்குக் கோரிக்கை:

ஊழலற்ற தூய்மையான அரசியல்” என்ற கொள்கையை தவெக தலைவர் விஜய் முன்னிறுத்தி வரும் வேளையில், அக்கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகியே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வெளியாகி இருப்பது பொது மக்களிடையேயும், அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…

அதேவேளையில், இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையைக் கண்டறிய சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்தப் பணம் உண்மையில் லஞ்சமாகப் பெறப்பட்டதா? அல்லது ஊராட்சி மன்றத் தலைவர் வீரா கூறுவது போல தனிப்பட்ட கடன் கொடுக்கல்-வாங்கல் தானா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உயர்மட்ட விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us