எ.வ.வேலுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
சென்னை, ஜூலை 15 : திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஜூலை 15, 2026 இன்று ஆஜரான நிலையில் அதனை காரணம் காட்டி வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
நெடுஞ்சாலைத் துறையில் சுமார் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 3, 2026 அன்று அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்ததால் அப்போது ஆஜராகவில்லை.
இதையும் படிக்க : லஞ்சம் வாங்கப்பட்டால் புகாரளிக்க வாட்ஸ்அப் எண் – தமிழக அரசு அதிரடி




அவர் ஆஜராகாததால் எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கையும், லுக் அவுட் நோட்டீஸையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் ஜூலை 27, 2026 அன்றுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அதுவரை மனுதாரருக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் அவர் ஜூலை 15, 2026 இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து. லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் நீபதிகள் முன் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசந்தோ சந்திர சென் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவை கைது செய்யக் கூடாது என்ற பொருளில் பொதுவான உத்தரவை உச்சநீதிமன்றம் தெளிவு இல்லாமல் பிறப்பித்துள்ளது. தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரான நிலையில் அதனை காரணம் காட்டி உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க அனுமதி – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஜூலை 15, 2026 நேரில் ஆஜராகியுள்ளார். தற்போது அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.