AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் இடம்பெறும் சூழல்”.. பரபரப்பை கிளப்பிய சிபிஐ வீரபாண்டியன்!!

தவெக கூட்டணி ஆட்சியில் கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கும் காலம் நெருங்கி வருவதாக சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தங்களது வாக்கு வங்கியை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், சூழ்நிலை நிர்பந்தித்தால் தனித்து களம் காணவும் இடதுசாரிகள் தயாராக இருப்பதாக அதிரடி வியூகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் இடம்பெறும் சூழல்”.. பரபரப்பை கிளப்பிய சிபிஐ வீரபாண்டியன்!!
சிபிஐ வீரபாண்டியன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Jul 2026 08:16 AM IST

கிருஷ்ணகிரி, ஜூலை 15: தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் அரசுடன் கூட்டணி மற்றும் அமைச்சரவை பங்கீடு குறித்த விவாதங்கள் அரசியல் தளத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் தோழர்கள் இடம்பெறுவதற்கான சூழல் கனிந்து வருவதாக அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி நடைபயணத்தின் போது, செய்தியாளர்களிடம் அவர் பகிர்ந்து கொண்ட முழுமையான செய்தி விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: ரூ.100 கோடி பழனி முருகன் கோவில் நில மோசடி புகார்.. “டிசைன் டிசைனா ரீல் சுத்தாதீங்க”.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்!!

மேகதாது விவகாரமும் அமைச்சரவை பங்கீடும்:

காவேரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று சிறப்பு நடைபயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரபாண்டியன் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், புதிய அரசியல் சூழலில் “கூட்டணி ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் இடம்பெறுமா? உங்களுடைய தோழர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

காலம் நெருங்கி வருகிறது:

அந்தச் சூழல் நிச்சயம் வரும். அந்தச் சூழல் வருகிற போது இந்த மண்ணில் இருந்து கூட, கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அதற்கான காலம் தற்போது மிக நெருங்கி வருகிறது. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு என் வாழ்த்துக்கள் என்றார். இதன் மூலம் தவெக தலைமையிலான தற்போதைய கூட்டணி ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர்களாகப் பொறுப்பேற்பதற்கான பேச்சுவார்த்தைகளும், அரசியல் நகர்வுகளும் தீவிரமாக நடந்து வருவதை அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ஓசூர்/கிருஷ்ணகிரி மண்ணில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதிய அமைச்சர் உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனித்து களம் காணவும் தயார்:

அமைச்சரவை பங்கீடு குறித்துப் பேசிய அதே வேளையில், அரசியல் மற்றும் தேர்தல் சூழ்நிலைகள் நிர்பந்தித்தால், நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளால் தனித்து நின்று களம் காண முடியும் என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “எங்களின் முதன்மையான மற்றும் பிரதான பகைமுரண் என்பது எப்போதுமே பிஜேபி (BJP) மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய சக்திகள்தான். இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில், இத்தகைய மதவாத சக்திகளுக்கு எதிராக திமுக, அதிமுக போன்ற ஜனநாயக சக்திகளுடன் எப்பொழுதுமே இணைந்து பாடுபடுவதிலும், மக்களுக்காகப் போராடுவதிலும் நாங்கள் உடன்பாடு கொண்டுள்ளோம்” என்று தங்களது அடிப்படைக் கொள்கையைத் தெளிவுபடுத்தினார்.

இடதுசாரிகளின் புதிய ஒருங்கிணைப்பு:

அண்மையில் இடதுசாரிகள் இணைந்து ஒரு புதிய ஒருங்கிணைப்பு அல்லது அணியைத் தொடங்கியுள்ளது குறித்துப் பேசிய அவர், “தேர்தல் என்பது வேறு; தேர்தல் வருகிற போது நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்பவே நாங்கள் இறுதி முடிவை எடுப்போம். தற்போது இடதுசாரிகள் இணைந்துள்ள இந்த ஒருங்கிணைப்பு குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன. ஒருவேளை தேர்தல் சூழலில் அத்தகையதொரு நிர்பந்தம் ஏற்படுமானால், இடதுசாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து அப்போது ஆலோசித்து முடிவு செய்வோம்” என்றார்.

1% ஓட்டுதான் என்று குறைத்து மதிப்பிடாதீர்கள்:

கம்யூனிஸ்டுகளுக்கு அரை சதவீதம், ஒரு சதவீதம் வாக்குகள் மட்டும்தான் இருக்கின்றன என்று சிலர் எங்களைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால், எங்களை ஆதரிப்பதற்காகப் பல லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தமிழ் மண்ணில் இருக்கிறார்கள். மக்களோடு நாங்கள் பின்னிப் பிணைந்துள்ளோம். தேர்தலில் தனித்துக் களம் காணும் சோதனையில் நாங்கள் இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை. அதனால்தான் எங்களது வாக்கு சதவிகிதத்தை இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

இதையும் படிக்க: சாத்தான்குளம் பாணி கொடூரம்?.. நாகர்கோவில் சிறைக்கைதி மரண வழக்கு.. உடற்கூராய்வில் அதிர்ச்சி.. 3 காவலர்கள் கைது!!

ஆனால், நாடு முழுவதும் எங்களுக்கென வலுவான உட்கட்சி அமைப்பு, ஆயிரக்கணக்கான கிளைகள் மற்றும் வாக்களிக்கக் காத்திருக்கும் பெருந்திரளான மக்கள் பட்டாளம் உள்ளது. அரசியல் நகர்வுகளின் காரணமாக ஒருவேளை தனித்து நிற்க வேண்டிய சூழலும், நிர்பந்தமும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டால், நாடு முழுவதும் தனித்து நின்றே எங்களால் மிகத் துணிச்சலாகக் களம் காண முடியும் என்பதை நான் இப்பொழுதும் அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

Follow Us