AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் பரபரப்பு.. தெருநாய் கடித்ததை அலட்சியப்படுத்திய நபர்.. வாயில் நுரை தள்ளி விபரீத மரணம்!!

stray dog menace: தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை அச்சமூட்டி வரும் நிலையில், சென்னையில் நாய் கடித்ததை அலட்சியம் செய்த நபர் 45 நாட்களுக்குப் பின் பலியானார். Kotturpuram பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், anti-rabies vaccine செலுத்திக் கொள்ளாததால் rabies infection symptoms தீவிரமாகி, தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் பரபரப்பு.. தெருநாய் கடித்ததை அலட்சியப்படுத்திய நபர்.. வாயில் நுரை தள்ளி விபரீத மரணம்!!
தெரு நாய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Jul 2026 10:28 AM IST

சென்னை, ஜூலை 15: தமிழகம் முழுவதும் அண்மைக்காலமாக தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், பொதுமக்களைக் கடித்துக்குதறும் தெருநாய்க்கடி சம்பவங்களும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், சென்னையில் தெருநாய் கடித்ததை அலட்சியப்படுத்தி முறையாகச் சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்த தொழிலாளி ஒருவர், 45 நாட்களுக்குப் பிறகு திடீரென வாயில் நுரை தள்ளி, கோரமான முறையில் உயிரிழந்த சம்பவம் கோட்டூர்புரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க : சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம்.. த.வெ.க நிர்வாகி என்றால் ஒரு சட்டம் – மாற்றுத்திறனாளி காவல் மரணத்தில் உதயநிதி கேள்வி..

நாய் கடித்ததை அலட்சியம்:

சென்னை கோட்டூர்புரம், சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த 45 நாட்களுக்கு முன்னதாக தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது தெருநாய் ஒன்று அவரது இடது காலில் பலமாகக் கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், முருகன் அதனை மிகவும் அலட்சியமாகக் கையாண்டுள்ளார். மேலும், நாய் கடித்த பிறகும் அவர் தொடர்ந்து தினமும் மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

திடீர் உடல்நலக் குறைவும் மரணமும்:

நாய் கடித்து 45 நாட்கள் கடந்த நிலையில், நேற்று முன்தினம் முருகனுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று, ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், நேற்று முருகனுக்குத் திடீரென உடலில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் நாய் போன்ற சில குணாதிசயங்களுடன் விசித்திரமாக நடந்து கொண்டதாகவும், வாயில் நுரை தள்ளியபடி கடுமையான வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் பதறியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை:

முருகனின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகன் ரேபிஸ் நோய் தாக்கிக் கடுமையான பாதிப்பினால் உயிரிழந்தாரா அல்லது அவரது உடலில் இருந்த வேறு ஏதேனும் தீவிரமான உடல்நலக் குறைபாடு மற்றும் மதுப் பழக்கத்தினால் இந்த மரணம் நிகழ்ந்ததா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வந்த பிறகே தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ரூ.100 கோடி பழனி முருகன் கோவில் நில மோசடி புகார்.. “டிசைன் டிசைனா ரீல் சுத்தாதீங்க”.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்!!

மருத்துவ எச்சரிக்கை:

தெருநாயோ அல்லது வீட்டில் வளர்க்கும் நாயோ கடித்தால், அதனைச் சிறிய காயம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாகப் பக்கத்தில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களின் ஆலோசனையின்படி உரிய கால இடைவெளிகளில் ரேபிஸ் தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக் கொள்வது மட்டுமே இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்கும் ஒரே வழியாகும்.

Follow Us