AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும், கொடுக்கப்பட்ட ஆரஞ்சு அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், ஜூலை 15, 2026 இன்றும், ஜூலை 16, 2026 நாளையும், வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், அதிக வெப்பத்திற்கான, ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்,  கொடுக்கப்பட்ட ஆரஞ்சு அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Jul 2026 06:42 AM IST

சென்னை, ஜூலை 15 : தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், ஜூலை 15, 2026 இன்றும், ஜூலை 16, 2026 நாளையும், வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், அதிக வெப்பத்திற்கான, ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டிலேயே அதிகமாக நேற்று மதுரையில், 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஜூலை 14, 2026 இயல்பை விட 4 டிகிரி வரை வெப்பம் உயர்ந்ததால், வறண்ட வானிலை நிலவியது. மேலும், ஜூலை 14, 2026 நாட்டிலேயே அதிகபட்சமாக, மதுரையில், 42.5 டிகிரி செல்சி யஸ், அதாவது, 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது; இது, கடந்த 26 ஆண்டுகளில் மதுரையில் பதிவாகாத வெப்பம் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடரும்… உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

திருத்தணி, வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, துாத்துக்குடி, ஈரோடு, கடலுார், கரூர் பரமத்தி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. மேற்கு திசை காற்றின், வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 15, 2026 இன்றும், ஜூலை 16, 2026 நாளையும், தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இயல்பை விட, 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து, வெப்ப அலை வீசும்.

காற்றில் ஈரப்பதமும் கலந்திருக்கும். எனவே, புழுக்கம் அதிகரித்து, அசவுகரியமான சூழல் நிலவலாம். இதனால், உள் தமிழகத்திற்கு, இன்று, ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை பாதிப்பை தவிர்க்க, பொதுமக்கள், மதியம் 12:00 மணி முதல், பிற்பகல் 3:00 மணி வரை, தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் எடுக்கா விட்டாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதையும் படிக்க : ரேஷன் கடைகளில் விரைவில் ஸ்மார்ட் திட்டம்.. விரல் ரேகைக்கு குட்பை.. முகத்தை காட்டி பொருட்கள் வாங்கும் புதிய வசதி!

மதுரையில் வரலாறு காணாத வெப்பநிலை

மோர், இளநீர், எலுமிச்சை சாறு, லஸ்ஸி மற்றும் ஓ.ஆர்.எஸ்., கரைசல் உள்ளிட்ட பானங்களை குடித்து, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். வெயிலின் நேரடி தாக்கத்திலிருந்து விடுபட, குடை, தொப்பி அணிந்து, தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத அளவில், ஜூலை 14, 2026 நேற்று மதுரை விமான நிலைய பகுதியில் 108.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக மதுரை விமான நிலைய பகுதி வரலாற்றில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. ஜூலை மாதத்தில் முதல் முறையாக 108.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us