தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி: அவருக்குக் கிடைக்கும் அதிகாரப்பூர்வ வசதிகள் என்னென்ன? முழு விவரம்!
Tamil Nadu Textbook Corporation Chairman: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளர் லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதிவியில் நியமிக்கப்படும் நபர்களுக்கு அரசு சார்பில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழக பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நியமனத்துக்கான ஆணையை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் லயோலா மணியிடம் வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் லயோலா மணி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் அவரது முக்கிய பணிகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாரிய தலைவருக்கு மாதம்தோறும் ரூ.25,000 மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. அரசு அலுவலக பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு இனோவா கார் அளிக்கப்படுகிறது. இந்த வாகனத்தை ஓட்டுவதற்காக தனி ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்டோர் இருப்பார்கள்.
பாடநூல் கழக தலைவரின் கல்வியியல் பணிகள்
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மேற்கொள்ள வேண்டிய கல்வியியல் பணிகள் குறித்த விவரமும் வெளியாகி உள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களை தரமாக தயாரிப்பது, அச்சிடுவது மற்றும் அந்த பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு தங்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்தல். பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுக்கு 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருவள்ளூர் அருகே மீண்டும் ஒரு சோகம்.. தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியது.. தீக்காயமடைந்த நபர் பரிதாப பலி!
மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள்
பாடநூல்கள் மட்டும் இன்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், காலணிகள் உள்ளிட்ட 10 வகையான கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்து அவற்றை புரிய நேரங்களில் மாணவர்களுக்கு வழங்குவது முக்கிய பணிகள் ஆகும். இந்த பதவியின் மூலமாக மாநிலத்தின் கல்வி திட்டங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை சீரமைப்பதில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் முக்கிய பங்காற்றுவார்.
ஆட்சி மாற்றத்தால் வாரிய தலைவர் மாற்றம்
கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக ஆசிரியரும், பட்டிமன்ற பேச்சாளரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், பாடநூல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் விரைவில் ஸ்மார்ட் திட்டம்.. விரல் ரேகைக்கு குட்பை.. முகத்தை காட்டி பொருட்கள் வாங்கும் புதிய வசதி!