திருவள்ளூர் அருகே மீண்டும் ஒரு சோகம்.. தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியது.. தீக்காயமடைந்த நபர் பரிதாப பலி!
Gummidipoondi SIPCOT Factory Boiler Exploded: திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் ஒரு தொழிலாளரி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தனியார் கடல் உணவு ஏற்றுமதி ஆலையில் திடீரென அமோனியா வாயு கசிந்து வட மாநிலங்களை சேர்ந்த 18 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்றொரு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயர்ந்துள்ளார். 4 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு, உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், சிப்காட் தொழிற்சாலையில் அமைந்துள்ள ஒரு ஆலையில் பணியாளர்கள் தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
தொழிற்சாலையில் வெடித்து சிதறிய ராட்சத பாய்லர்
அப்போது, எதிர்பாராத விதமாக தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் ஒன்று திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த ரவி என்பவர் பலத்த தீக்காயம் அடைந்தார். மேலும், வட மாநிலங்களை சேர்ந்த 4 தொழிலாளர்களும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை அறிந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: பெரம்பூரை மாற்ற போகும் டிஜிட்டல் புரட்சி.. அரசுடன் நேரடி கனெக்ட்.. மக்கள் சேவை தளம் செயலி செயல்படும் விதம்!




மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு
அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாய்லர் வெடித்ததில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ரவி என்ற தொழிலாளர் பலத்த தீக்காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 தொழிலாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாய்லர் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை
உயிரிழந்த ரவியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த பாய்லர் வெடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 73000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி.. அதிரடியாக தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!