AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த லெவலுக்கு செல்லும் தமிழக கல்வித்துறை.. அரசு பள்ளிகளில் ஏஐ- காலநிலை அறிவியல் பாடம்.. முழு விவரம் உள்ளே!

AI and Climate Science Subjects: தமிழக அரசுப் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் குறித்த பாடங்களை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த லெவலுக்கு செல்லும் தமிழக கல்வித்துறை.. அரசு பள்ளிகளில் ஏஐ- காலநிலை அறிவியல் பாடம்.. முழு விவரம் உள்ளே!
அரசு பள்ளிகளில் ஏஐ பாடம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Jul 2026 06:27 AM IST

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் தொடர்பான பாடங்களை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கால சூழலில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற காலநிலை அறிவியல் தொடர்பாகவும் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த இரு பாடங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், யற்செகை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் பாடங்கள் தொடர்பாகவும், இதனை பாடத்திட்டங்களில் சேர்ப்பது தொடர்பாகவும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்

அத்துடன் வரும் 2031- ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நவீன வகுப்பறைகளும் ஸ்மார்ட் கிளாஸ் அறைகளாக மாற்றம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெறும் வகையிலான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க: பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்.. மக்கள் உற்சாக வரவேற்பு..

ஏஐ- டிஜிட்டல் கல்வி திறன் மேம்பாடு

இதை தவிர்த்து அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, அரசு பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறமையாக கற்றுக் கொள்ள ஏதுவாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்படுத்தும் திட்டம் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கை விரைவில் மக்கள் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் என்னென்ன புதிய அறிவிப்புகளை இடம் பெற செய்யலாம் என்பது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி

இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை செயலாளர் சித்திக், பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்திரமோகன், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசு பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க: நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!

Follow Us