AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் முதல்வர் விஜய் – நலம் TN இணையதளம் தொடக்கம்

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 2144 பேருக்கு ஜூலை 14, 2026 இன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார். மேலும் சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து, நலம் TN என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைக்கிறார்

2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் முதல்வர் விஜய் – நலம் TN இணையதளம் தொடக்கம்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Jul 2026 08:05 AM IST

சென்னை, ஜூலை 14 : மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 2144 பேருக்கு ஜூலை 14, 2026 இன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார். மேலும் சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து, நலம் TN என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைக்கிறார். அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் எளிதாக பெறும் வகையில் இந்த நலம் TN இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நலம் ஏஐ என்ற சாட்பாட் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் முதல்வர் விஜய்

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 2144 பேருக்கு ஜூலை ஜூலை 14, 2026 இன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார்.  சுகாதாரத் துறை சார்பில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கான நியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் இன்று வழங்குவார்,139 கோடி மதிப்பிலான மருத்துவ உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் ‘நலம் தமிழ்நாடு’ வலைதளத்தையும் திறந்து வைப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி திடீர் சந்திப்பு.. 45 நிமிடம் நடந்தது என்ன?

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக புறநோயாளிகள் பிரிவு சேவைக்கான முன்பதிவு செய்யும் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கடந்த ஜூலை 8, 2026 அன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, படிப்படியாக மற்ற துறைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

நலம் தமிழ்நாடு இணையதளம்

மேலும் தமிழ்நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் குறிப்பிட்ட பிரிவுகளில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் நலம ஏஐ என்ற பெயரில் வாட்ஸ்ஆப் சாட்பாட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த வாட்ஸ்ஆப் மூலமாகவே புறநோயாளிகள் பிரிவுக்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதற்கு வாட்ஸ்ஆப்பில் 9619222999 என்ற எண்ணுக்கு ‘hi’ என்று அனுப்பினால் அதில் கேட்கும் விவரங்களுக்கு பதில் அளித்தால் மருத்துவ சேவைக்கு முன்பதிவு செய்யப்படும். மருந்துச் சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை வாட்ஸ்ஆப் மூலமாகவும் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

90749

மேலும் இந்த சேவையை விரிவுபடுத்தும் விதமாக தற்போது நலம் ஏஐ என்ற சேவையையும் முதல்வர் விஜய் ஜூலை 14, 2026 இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தனியார் மருத்துவமனைகள் போல அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவரை சந்திக்க முன்பதிவு செய்து கொள்ள முடியும். மேலும், புறநோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதி சீட்டு பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் அந்த சிக்கலும் இதன்மூலம் சரி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Follow Us