மூவர் உயிரிழப்பு? தமிழகத்தில் அதி வீரிய கொரோனா பரவலா? சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Tamil Nadu Corona Virus Spread: தமிழகத்தில் அதிக வீரியம் கொண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலூரில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்ததாக தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மற்றும் அன்னமய்யா ஆகிய மாவட்டங்களில் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும், இந்த வைரஸ் தோற்றால் 8 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். இந்த தகவல் வேகமாக பரவிய நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதா. இதன் மூலம் உயிரிழப்புகள் செய்கிறதா என்ற அச்சம் எழுந்தது. இந்த நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசின் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கூறுகையில், அண்மையில் கொரோனா காரணமாக ஆந்திராவில் இருவரும் உயிரிழந்தனர். 52 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூவர் உயிரிழந்ததுக்கான காரணம் என்ன
அங்கு பாக்டீரியா மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும், நீரிழிவு, நீண்டகால சிறுநீரக நோய் தொற்று ஆகிய இணை நோய்களின் காரணமாகவும், கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும் தீவிர சுவாச கோளாறு சிக்கல்களால் கடந்த 28 ஜூன் மாதம் உயிரிழந்தார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவர் ஒருவர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சுவாச செயலிழப்பு காரணமாக அவரும் உயிரிழந்தார். இதில், கொரோனா தொற்று தற்செயலான கண்டறிகலாக இருந்தது.
மேலும் படிக்க: நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை.. நடிகையை ஆபாச படம் எடுக்க முயன்ற கும்பல் சிக்கியது.. சென்னையில் சம்பவம்!




கொரோனா நோய் கண்காணிப்பு – சிகிச்சை
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க நபர் அம்மாவட்ட மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதில், மருத்துவ விவரங்கள் தொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கான கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவும், தீவிர சுவாச நோய்கள் சிகிச்சைக்கு பலனளிக்காத நோயாளிகளுக்கும், பிற நோயாளிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.
காய்ச்சல் தொற்று இருந்தால் . . .
இந்த நிலையில், தேசிய வைராலஜி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில், தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று லேசான நோய் வழிபாட்டை கொண்டதாகவும், சமுதாயத்தில் குறைந்த அளவிலான பரவல் மட்டுமே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை. காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் 16ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்.. பட்ஜெட் தாக்கல் எப்போது?