AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் கடைகளில் விரைவில் ஸ்மார்ட் திட்டம்.. விரல் ரேகைக்கு குட்பை.. முகத்தை காட்டி பொருட்கள் வாங்கும் புதிய வசதி!

Ration Shops Facial Recognition: தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அந்த துறையின் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கடைகளில் விரைவில் ஸ்மார்ட் திட்டம்.. விரல் ரேகைக்கு குட்பை.. முகத்தை காட்டி பொருட்கள் வாங்கும் புதிய வசதி!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Jul 2026 08:34 AM IST

தமிழகம் முழுவதும் சுமார் 38,424 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் குடும்பத்தை சேர்ந்தவரின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு மேற்கண்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேசன் பொருட்கள் முறைகேடு தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறுகையில், சேமிப்பு கிடங்குகள் மற்றும் நெல் கொள்முதல் செய்யப்படும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து பொருள்களும் தரமாக கிடைக்கும்

நெல்லை அரிசியாக மாற்றும் அரவை ஆலைகளின் உரிமையாளர்களிடம் தரமான அரிசி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாத காலத்துக்குள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய அரிசி கிடைக்க உள்ளது. இதேபோல, அனைத்து பொருட்களும் பொது மக்களுக்கு தரமாக கிடைக்கும். வரும் காலங்களில் ரேஷன் அட்டைகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் இல்லாமல் விரைந்து வழங்கப்படும். மேலும், குடும்ப உறுப்பினர்களின் முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்க திட்டம் உள்ளது.

மேலும் படிக்க: நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!

ரேஷன் கடைகளில் முக அங்கீகாரம் திட்டம்

இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய்யிடம் ஆலோசனை மேற்கொண்டு தொழில்நுட்ப ஆய்வு செய்யப்பட்டு இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கடந்த காலங்களில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைகளில் பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதை நிவர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

முறைகேடுகளை தடுக்க திட்டமா

இதிலும், முறைகேடுகள் நிகழ்ந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னரே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது, இதிலும் நூதன முறைகேடு நிகழவதாக கூறப்படுகிறது. எனவே, ரேஷன் பொருள்கள் முறைகேடு என்பதை முழுமையாக தடுக்கும் வகையில் குடும்ப உறுப்பினர்களின் முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க: மூவர் உயிரிழப்பு? தமிழகத்தில் அதி வீரிய கொரோனா பரவலா? சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Follow Us