AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு

முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் இந்த திட்டத்துக்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Jul 2026 09:46 AM IST

சென்னை, ஜூலை 14 : முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் தேர்தலில் வென்று தவெக ஆட்சியமைந்த நிலையில் இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15, 2026 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டத்துக்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழக அரசு ஜூலை 14, 2026 இன்று வெளியிட்டுள்ளது.

டெண்டர் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு

இந்த நிலையில் இந்த திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி ஜூலை 14, 2026 இன்று முதல் வருகிற ஆகஸ்ட் 17, 2026 வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,725 என்ற அடிப்படையில் 4,41, 667 ஒரு கிராம் தங்கம் வாங்க ஒப்பந்தம் அறிிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அடுத்த லெவலுக்கு செல்லும் தமிழக கல்வித்துறை.. அரசு பள்ளிகளில் ஏஐ- காலநிலை அறிவியல் பாடம்.. முழு விவரம் உள்ளே!

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையில், தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” வடிவமைக்கப்பட்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தாய் சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையை திட்டமிடும் முறை மற்றும் கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இம்முயற்சிகள் மாநிலத்தில் தாய் சேய் நலக் குறியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க : பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி திடீர் சந்திப்பு.. 45 நிமிடம் நடந்தது என்ன?

ஒரு கிராம் தங்க மோதிரம்

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழர் பாரம்பரியத்தில், “தாய்மாமன் சீர்” என்ற மரபின்படி, தமிழ்நாடு முதல்வர், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது இவ்வறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us