AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வானிலை மையம் எச்சரிக்கை – அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் வெப்ப நிலை 7 டிகிரி வரை அதிகரிக்கும்

TN Weather Alert : தமிழகத்​தில் ஜூலை 14, 2026 இன்று முதல் ஜூலை 16, 2026 வியாழன் வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை – அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் வெப்ப நிலை 7 டிகிரி வரை அதிகரிக்கும்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Jul 2026 06:43 AM IST

சென்னை, ஜூலை 14 : தமிழகத்​தில் ஜூலை 14, 2026 இன்று முதல் ஜூலை 16, 2026 வியாழன் வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகம் நோக்கி மேற்கு திசை காற்​றில் வேக​மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, ஜூலை 14, 2026 இன்றும், ஜூலை 15, 2026 நாளை​யும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வெப்ப நிலை 7 டிகிரி வரை அதிகரிக்கும்

மற்ற பகு​தி​களான தமிழ்நாடு, புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் ஆகிய பகுதிகளில் பொது​வாக வறண்ட வானிலை நில​வக்​கூடும். மேலும் ஜூலை 16, 2026 முதல் ஜூலை 19, 2026 நாள் வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

இதையும் படிக்க : தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் 16ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்.. பட்ஜெட் தாக்கல் எப்போது?

தமிழகத்​தில் ஜூலை 14, 2026 முதல் ஜூலை 16, 2026 தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை ஓரிரு இடங்​களில் வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​க​மாக இருக்​கக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். தமிழக கடலோர பகு​தி​களில் ஜூலை 14, 2026 இன்று முதல் ஜூலை 17, 2026 வரை மீனவர்​களுக்​கான எச்​சரிக்கை ஏதும் இல்​லை. மேலும் ஜூலை 13, 2026 நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் குறிப்​பிடும்​படி​யாக எங்​கும் மழை பதி​வாக​வில்​லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வெப்பநிலை உயரும்போது நீர்ச்சத்து இழப்பு போன்ற பிரச்னைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். வெப்பத்தின் தீவிரத்தைக் குறைக்க நம்மால் இயலாது என்றாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் வருகிற ஜூலை 16 வரை வெப்ப நிலை 7 டிகிரி வரை அதிகரிக்கும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருக்கும் நிலையில் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாப்பது அவசியம்.

இதையும் படிக்க : பெரம்பூரை மாற்ற போகும் டிஜிட்டல் புரட்சி.. அரசுடன் நேரடி கனெக்ட்.. மக்கள் சேவை தளம் செயலி செயல்படும் விதம்!

கடும் வெப்பம் காரணமாக சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பாதிப்பு , வேர்க்குரு மற்றும் பூஞ்சைத் தொற்று போன்றவை ஏற்படலாம். இவற்றைத் தடுக்க, தினமும் இருமுறை குளிப்பது, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும். வெளியே செல்லும்போது தரமான சன் கிளாஸ் அணிவது கண்களுக்குப் பாதுகாப்பளிக்கும். கடும் வெப்பம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் விரைவில் சோர்வடையும் வாய்ப்புள்ளது. நீர்ச்சத்து இழப்பைத் தவிர்க்க முதியவர்கள் அடிக்கடி தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அருந்த வேண்டும். விளையாடும்போது குழந்தைகள் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடக்கூடும் என்பதால், அவர்கள் போதுமான அளவு நீர் அருந்துவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

Follow Us