சென்னையில் அதிகரித்து வரும் வெப்பம்.. 12 லட்சம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி திட்டம்!
Chennai Corporation Plants Planting Initiative | புவி வெப்பமயமாதலால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மிக கடுமையாக வெப்பமடைந்து வருகிறது. இந்த நிலையில் தான் சென்னை முழுவதும் சுமார் 50,000 மரக்கன்றைகளை நட திட்டமிட்டுள்ளது.
சென்னை, ஜூலை 13 : அதிகரித்து வரும் வெப்பத்தைக் குறைக்கவும், நகர்ப்புற பசுமையை அதிகரிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி ஓராண்டில் 12 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கிச் செயல்பட்டு வரும் மாநகராட்சி, உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 05, 2026 முதல், இதுவரை நகரின் பல்வேறு பகுதிகளில் 86,000 மரக்கன்றுகளை நடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
50,000 மரக்கன்றுகளை நட திட்டம்
இந்த இலக்கை அடைய, மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் தலா 50,000 மரக்கன்றுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளது. மேலும், வனத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் தனியாரிடமிருந்து மரக்கன்றுகளை வாங்கி, அவை 4 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தை அடைந்தவுடன் நகரம் முழுவதும் நடவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 73000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி.. அதிரடியாக தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ள இடங்கள்
திருவொற்றியூர் எம்.ஆர்.எஃப் பூங்கா, மணலி எம்.எம்.டி.ஏ பூங்கா, மாதவரம் சில்வர் ஸ்கை பூங்கா, ராயபுரம் மின்ட் பூங்கா, திரு. வி. க. நகர் ஹெர்பல் பூங்கா, தேனாம்பேட்டை டர்ன்புல்ஸ் சாலை பூங்கா, கோடம்பாக்கம் நடேசன் பூங்கா மற்றும் ஜெய் நகர் பூங்கா, வளசரவாக்கம் எம்.எஸ். சுவாமிநாதன் ஈரநிலப் பூங்கா, அடையாறு இந்திரா நகர் 4-வது குறுக்கு தெரு பூங்கா, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள காமாட்சி நகர் மற்றும் தேவராஜ் நகர் 2-வது பிரதான சாலை பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!
உள்நாட்டு மரங்கள் நடப்பட உள்ளது
இங்கு வளர்க்கப்படும் மரங்கள் நகரின் வெப்பத்தைக் குறைக்க, பள்ளிகள், பூங்காக்கள், காலி இடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் உள்நாட்டு மரக்கன்றுகளை நட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நீர்மருது, பாதாம், சரக்கொன்றை, பூவரசு, புங்கம், கூந்தப்பனை, வேப்பமரம் உள்ளிட்ட உள்நாட்டு மரங்கள் நடப்பட உள்ளது. நகர்ப்புற பசுமையை மேம்படுத்தவும், எதிர்கால சூழலியலை கருத்தில் கொண்டும் இத்திட்டத்தில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.