AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நலம் டிஎன்” இணையதளம் தொடங்கி வைப்பு.. இலட்சிணையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

CM Joseph Vijay Launched Nalam TN: சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் நலம் டிஎன் என்ற இணையதளத்தை முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நலம் டிஎன் திட்டத்தின் இலட்சிணையையும் முதல்வர் வெளியிட்டார். இது குறித்த முழு விவரம்.

“நலம் டிஎன்” இணையதளம் தொடங்கி வைப்பு.. இலட்சிணையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!
நலம் இணையதளம் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 14 Jul 2026 11:42 AM IST

சென்னை மாநில கல்லூரியில் நலம் டிஎன் இணையதளம் தொடங்கி வைக்கும் நிகழ்வு, நலம் டிஎன் இலச்சினை வெளியிடும் நிகழ்வு, மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு ஆகியவை நடைபெற்றது. இதில், முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று நலம் டிஎன் இணையதளத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நலம் டிஎன் இலச்சினையை வெளியிட்டார். பின்னர், மருத்துவர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார். இதில், 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். முன்னதாக, மாற்றுத்திறனாளி பெண் மருத்துவர் மேடை ஏறி வர முடியாத காரணத்தால், முதல்வர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்த

மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு, உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில் நலம் டிஎன் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: பொதுமக்களுக்கு நோய் தாக்குதல் வராமல் தடுக்கக்கூடிய பொறுப்புகளை உடையவர்கள் சுகாதார ஆய்வாளர்கள். தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் பெரும்பாலானோர் வசதி படைத்தவர்கள் அல்ல. நோயுடன் வரும் நோயாளிகள் அண்ணன் விஜய் தலைமையிலான அரசு தம்மை நிச்சயம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் வருகின்றனர். அந்த நம்பிக்கையின் வடிவமாகவே மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்ற உள்ளனர்.

மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு

நலம் டிஎன் திட்டம் எதற்காக தொடக்கம்

ஏழை மக்களிடம் நீங்கள் காட்டும் அன்பான அக்கறையும், பேச்சும் தான் அரசு மீதான நம்பிக்கையை வெளிக்காட்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நலம் டிஎன் என்ற திட்டமானது அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி, தூய்மையான கழிவறை, சுற்றுச் சுவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. மற்றொருபுறம் போதிய அளவிலான டயாலிசிஸ் இயந்திரங்கள், நவீன புற்றுநோய் சிகிச்சை உபகரணங்கள் அதிக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. இதன் காரணமாக தமிழக சுகாதாரத்துறை முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

சிறிய பங்களிப்பை பொதுமக்கள் செலுத்தலாம்

இந்த மகத்தான மக்கள் பணியில் நாம் அனைவரும் பங்கெடுக்கும் அரிய வாய்ப்புதான் நலம் டிஎன் என்ற அமைப்பாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்த அமைப்பின் மூலமாக தங்களால் இயன்ற பங்களிப்பை செலுத்தலாம். இது வெளிப்படைத்தன்மையாக இருக்கும். இதற்காகவே இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வீடுகளில் திருமணம், பிறந்தநாள் விழா எதுவாக இருந்தாலும் அரசு மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக ஒரு சிறிய பங்கை இந்த அமைப்பில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி: அவருக்குக் கிடைக்கும் அதிகாரப்பூர்வ வசதிகள் என்னென்ன? முழு விவரம்!

Follow Us