AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.100 கோடி மோசடி? திமுக நிர்வாகி மீது குண்டர் சட்டம்

தனியா் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித்த தொடர்பு துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.100 கோடி மோசடி? திமுக நிர்வாகி மீது குண்டர் சட்டம்
பி.டி.அரசகுமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Jul 2026 11:03 AM IST

சென்னை, ஜூலை 14 : தனியா் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித்த தொடர்பு துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னை டி.நகரில் உள்ள தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் இளங்கோவன் சமீபத்தில் பி.டி.அரசகுமார் மீது சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

திமுக நிர்வாகி மீது குண்டர் சட்டம்

அவரது புகாரில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல், திட்ட அனுமதி ஆகியவற்ற பெற சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனை பயன்படுத்தி சென்னை சாலிகிராமத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் திமுக செய்தித்தொடர்பு துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி தனியார் பள்ளி பள்ளிகளுக்கு அங்கீகாரம், தரம் உயர்வு, டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி பிற சட்டபூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருதாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  ரூ.5000 லஞ்சம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை.. கம்பி எண்ணும் ராமநாதபுரம் சர்வேயர்!

இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக்கொண்ட பி.டி. அரசகுமார், உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் சுமார் ரூ. 100 கோடி மோசடி செய்துள்ளார். எனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட பி.டி. அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் முதல்வர் விஜய் – நலம் TN இணையதளம் தொடக்கம்

அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியில் வசித்து வரும் பி.டி. அரசகுமாரை 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரை 3 நாள்களில் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அரசகுமார் மீது, 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்து இருப்பதால், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, ஜூலை 13, 2026  நேற்று பி.டி. அரசகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் தான் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us