ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? பிசிசிஐ செயலாளர் முக்கிய விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன. இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, ரோகித் சர்மா குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன. குறிப்பாக இங்கிலாந்துக்குக்கு எதிராக லார்ட்ஸ் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியே அவரது கடைசி போட்டியாக இருக்கலாம் என கூறப்பட்டது. மேலும் ரோகித்தின் கடைப்போட்டியை காண அவரது பெற்றோர்களும் இங்கிலாந்து வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைக்கியா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா?
ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டை பொறுத்தவரை ரோகித் சர்மா மிக முக்கிய வீரர், அவர் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டி கடைசி போட்டியாக இருக்காது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெளிவுபடுத்தினார். மேலும் இதுகுறித்து பிசிசிஐ எந்த வித ஆலோசனையும் நடத்தவில்லை என்று தேவஜித் தெளிபடுத்தியுள்ளார். அணி நிர்வாகம் விரும்பும் வரை அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என்றும் அவர் விலக்கமளித்துள்ளார்.




இதையும் படிக்க : IND vs ENG: ரோஹித் சர்மா திணறுகிறாரா? பேட்டிங் பயிற்சியாளர் கொடுத்த ட்விஸ்ட்!
இதனையடுத்து வருகிற ஜூலை 19, 2026 லார்ட்ஸில் நடைபெறும் போட்டியே அவரது கடைசி போட்டி என்பதில் உண்மை இல்லை என்பது தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக மதுல் 2 போட்டிகளில் ரோகித் சர்மா சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை. இதனால் அவரது ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிக்க : Team India: விரைவில் ரோஹித் சர்மா ஓய்வா..? தொடக்க வீரராக களமிறங்க காத்திருக்கும் 4 வீரர்கள்!
ஆனால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், ரோகித் மீது எந்த அழுத்தமும் இல்லை என விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்றும் அவர் முதல் 2 போட்டிகளில் ரன்கள் எடுக்காதது பெரிய விஷயமில்லை. அவர் எந்த வித சூழ்நிலைகளிலும் சிறப்பாக ஆடக் கூடியவர் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பெரிய அளவில் எடுபடவில்லை. இதுவரை விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில், அவர் 30.12 என்ற சராசரியுடன் மொத்தம் 241 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளிலும் அவர் எதிர்பார்த்த அளவு சிறப்பாக விளையாடவில்லை. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில், முதல் போட்டியில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், கார்டிஃப்பில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 47 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.