IND vs ENG: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்.. குர்னூர் பிரார் பக்கம் சாய்ந்த மோசமான சாதனை!
Gurnoor Brar Unwanted Record: இந்தியாவுக்காக ஒரு ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த விரும்பத்தகாத சாதனையை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் 10 ஓவர்களில் 106 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.
லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் (IND vs ENG 3rd ODI) போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் அதிக ரன்களை விட்டுகொடுத்து மோசமான சாதனையை படைத்தார். இந்த போட்டியில் குர்னூர் பிரார் 10 ஓவர்களில் 9.70 என்ற எகானமி ரேட்டில் 97 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்த புள்ளிவிவரத்தின் மூலம், ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக (Indian Cricket Team) 3வது அதிக ரன்கள் விட்டுகொடுத்தவர் என்ற பெருமையை குர்னூர் பிரார் படைத்துள்ளார். குர்னூர் பிரார் லார்ட்ஸில் தனது 6வது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுவதாக தெரிகிறது. இந்தியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. இது இளம் பந்து வீச்சாளர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ALSO READ: தொடர்ச்சியாக 20 டாட் பந்துகள்.. புது சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா..!
இந்த மோசமான சாதனையில் யார் முதலிடம்..?
இந்தியாவுக்காக ஒரு ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த விரும்பத்தகாத சாதனையை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் 10 ஓவர்களில் 106 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். இந்தப் பட்டியலில் வினய் குமார் இரண்டாம் இடத்தில் உள்ளார். கடந்த 2013-ல் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வினய் குமார் வெறும் 9 ஓவர்கள் மட்டுமே வீசி 102 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அதன்படி, இதுவரை 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வரும் வினயும்தான்.




ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியல்:
- 1/106 (10 ஓவர்கள்) புவனேஷ்வர் குமார் vs தென்னாப்பிரிக்கா, வான்கடே 2015
- 1/102 (9 ஓவர்கள்) வினய் குமார் vs ஆஸ்திரேலியா, பெங்களூரு 2013
- 0/97 (10 ஓவர்கள்) குர்னூர் பிரார் vs இங்கிலாந்து, லார்ட்ஸ் 2026
- 1/92 (10 ஓவர்கள்) புவனேஷ்வர் குமார் vs நியூசிலாந்து, கான்பூர் 2017
ALSO READ: சச்சின்- டிராவிட்டின் மாபெரும் சாதனை முறியடிப்பு.. முதலிடத்தில் முத்திரை பதித்த ரோஹித் – கோலி!
இங்கிலாந்து லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் தங்களது அதிகபட்ச ஸ்கோர் பதிவு:
லார்ட்ஸில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கைத் தீர்மானித்தது. ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்தது. இது லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். பென் டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்கள் குவித்து, அணிக்கு ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். இதில் 18 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்த வீரர் என்ற பெருமையை டக்கெட் பெற்றார்.