IPL 2026: சாம்பியனான ஆர்சிபி.. அனுஷ்கா சர்மாவுடன் க்யூட் டான்ஸ் ஆடிய கோலி.. வைரலாகும் வீடியோ!
Virat Kohli and Anushka Sharma Dance: ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இரண்டாவது தொடர்ச்சியான பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணி தனது முதல் கோப்பையை கடந்த 2025-ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நேற்று அதாவது 2026 மே 31ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை (Gujarat Titans) வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2026 (IPL 2026) பட்டத்தை வென்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியில் விராட் கோலி முக்கியப் பங்காற்றி, ரன் சேஸிங்கை நடத்தி வெற்றியை தேடி கொடுத்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் இருவரும் ஆடிய நடன அசைவுகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டி-ஷர்ட் அணிந்த விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவுடன் நடனமாடும் வீடியோவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் நடனம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்த நடனத்தின் போது, கிங் கோலி தினேஷ் கார்த்திக்குடனும் நடனமாடினார். ஆர்சிபி நிர்வாகம் அந்த வீடியோவைப் பகிர்ந்தபோது, அதன் தலைப்பில், “நடனத் தளத்தில் கிங் கோலியின் மாஸ்டர்கிளாஸ். அசல் வைப்ஸ். மனதிற்கு இதமானது. இன்னும் பலவும் உண்டு. அனுஷ்கா ஷர்மா, எங்கள் முதல் நாளில் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.




ALSO READ: ஐபிஎல் 2026.. பரிசுத் தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?
பெங்களூரு அணி 2வது முறை சாம்பியன்:
𝗞𝗶𝗻𝗴 𝗞𝗼𝗵𝗹𝗶’𝘀 𝗺𝗮𝘀𝘁𝗲𝗿𝗰𝗹𝗮𝘀𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗱𝗮𝗻𝗰𝗲 𝗳𝗹𝗼𝗼𝗿 😉
Pure vibes. Wholesome. And so much more. Anushka Sharma, thank you for being our Day 1. ❤️ pic.twitter.com/7Qmxxv6QtG
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 1, 2026
ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இரண்டாவது தொடர்ச்சியான பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணி தனது முதல் கோப்பையை கடந்த 2025-ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போது, ஆர்சிபி தனது இரண்டாவது கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
ALSO READ: குஜராத் டைட்டன்ஸ் பேருந்தில் விபத்து: நூலிழையில் தப்பித்த வீரர்கள்.. நடந்தது என்ன?
பெங்களூரு வெற்றி பெற்றது எப்படி..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பந்துவீச்சைத் தீர்மானித்தார். முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர், 5 பவுண்டரிகள் உட்பட 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்து அணியை வழிநடத்தினார்.
இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 42 பந்துகளில் 75* ரன்கள் குவித்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார். இந்த இன்னிங்ஸிற்காக கோலிக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.