தூங்கிக் கொண்டிருந்த தாயை கொலை செய்த மகன்.. சென்னை பெருங்குடியில் அதிர்ச்சி சம்பவம்..
Chennai Crime: போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக ராகேஷ் மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் பெற்றோர் அடிக்கடி கண்டித்ததாகவும், வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 20, 2026: சென்னை பெருங்குடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த தாயை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், உறலால் தாக்கியும் கொலை செய்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெருங்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது மனைவி சேனி தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பாபுலால், பெருங்குடி பகுதியில் அடகுக் கடை நடத்தி வருகிறார். இவரது 19 வயது மகன் ராகேஷ், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞன்:
ராகேஷுக்கு கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர், தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாபுலாலின் உறவினர் ஒருவர் உயிரிழந்ததால், அவர் ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் நில முறைகேடு பத்திரம் வெளியீடு.. பெரும் அதிர்ச்சி.. நடந்தது என்ன?
கழுத்தை நெறித்தும் கத்தியால் குத்தியும் தாயை கொலை செய்த மகன்:
நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை, ராகேஷ் திடீரென தூங்கிக் கொண்டிருந்த தனது தாயார் சேனி தேவியின் கழுத்தை துணியால் நெரித்தும், காய்கறி வெட்டும் கத்தியால் குத்தியும், பின்னர் உறலால் தாக்கியும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த அவரது சகோதரி கூச்சலிட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்.. 1,750 கிலோ சிவப்பு தங்கம் கொள்ளை.. அரசு கிடங்கில் மர்ம நபர்கள் அத்துமீறல்!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் போலீசார், சேனி தேவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் மனநலம் பாதிப்பு:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக ராகேஷ் மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் பெற்றோர் அடிக்கடி கண்டித்ததாகவும், வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள துரைப்பாக்கம் போலீசார், சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.