IND vs IRE: அயர்லாந்து சுற்றுப்பயணம்.. இந்திய அணிக்கு யார் கேப்டன்? குழப்பத்தில் பிசிசிஐ!
IND vs IRE T20 Series: ஐபிஎல் சீசனில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையில், 2024ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது. 2025-ல், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். இந்த ஆண்டும், அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நான்காவது இடத்தை நூலிழையில் தவறவிட்டது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் வருகின்ற 2026 ஜூன் 26ம் தேதி தொடங்குகிறது. 2026 ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடருக்கான இந்திய அணி (Indian Cricket Team) வருகின்ற 2026 ஜூன் 17-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தத் தொடருக்கு ஒரு புதிய இந்திய அணியை அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தத் திசையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தத் தொடருக்கு இந்திய அணிக்கு ஒரு புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்காக, சஞ்சு சாம்சன் (Sanju Samson) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பெயர்கள் செய்திகளில் அடிபடுகின்றன. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஐபிஎல் 2026 சீசனிலும் சஞ்சு சாம்சன் சிறப்பாகச் செயல்பட்டு, 2 சதங்களை பதிவு செய்தார். மேலும், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் தலைமை தாங்கிய அனுபவமும் உண்டு. இவற்றுடன், அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டிலும் அனுபவம் உண்டு.
ALSO READ: வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணிக்காக அறிமுகமாகிறாரா? பிசிசிஐ கொடுத்த குட் நியூஸ்!
கேப்டன் பதவிக்கான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்:
ஐபிஎல் சீசனில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையில், 2024ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது. 2025-ல், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். இந்த ஆண்டும், அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நான்காவது இடத்தை நூலிழையில் தவறவிட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஆனால், 2023-க்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சர்வதேச டி20 போட்டியில்கூட விளையாடவில்லை. எனவே, பிசிசிஐ அவரிடம் கேப்டன் பதவியை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும்.




கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு சிக்கல்:
அவரது கடந்த சில மாதங்களாகவே சூர்யகுமார் யாதவின் பார்ம் மோசமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த முடிவை ஐபிஎல் செயல்பாட்டின் அடிப்படையில் எடுக்க முடியாது. எனவே, சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால், அவரது வயது அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, 2028 டி20 உலகக் கோப்பைக்கு ஒரு புதிய தலைமையை உருவாக்க வேண்டியது அவசியம். எனவே, அவர் டி20 அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 30 உத்தேச வீரர்கள் பட்டியலிலிருந்தும் சூர்யகுமார் நீக்கப்பட்டுள்ளார்.
ALSO READ: முகமது சிராஜ் காயத்தால் விலகலா? ஆப்கானிஸ்தானுக்கு எதிராக யாருக்கு வாய்ப்பு?
மறுபுறம், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு அயர்லாந்துக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம். ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.