Team India: சூர்யவன்ஷிக்கு அழைப்பு.. அயர்லாந்து, இங்கிலாந்து, ஆசிய போட்டிக்கான இந்திய டி20 அணியின் விவரம்!
India T20I Squad: 2026 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து விலகப்பட்டுள்ளார். மேலும், திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 3 அணிகளிலும் இடம்பெற்று, தனது முதல் சர்வதேச போட்டிக்கான அழைப்பைப் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய டி20 அணியை பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தப்படி, இந்திய டி20 அணியின் (Indian Cricket Team) புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம், 2026 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து விலகப்பட்டுள்ளார். மேலும், திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 3 அணிகளிலும் இடம்பெற்று, தனது முதல் சர்வதேச போட்டிக்கான அழைப்பைப் பெற்றுள்ளார்.
ALSO READ: இந்திய அணியில் இவ்வளவு மாற்றமா? 10 பேர் புதுசு.. 2018 உடனான ஒப்பீடு!




அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் சூர்யவன், வைபவ் சூர்யவன்ஷி.
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, பிரின்ஸ் யாதவ்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணி
Presenting #TeamIndia‘s T20I squads for the tours of England & Ireland 2026 🇮🇳#ENGvIND | #IREvIND pic.twitter.com/f84kSSAIDf
— BCCI (@BCCI) June 6, 2026
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா , சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்ரவர்த்தி, பிரின்ஸ் யாதவ்.
இந்தியா – அயர்லாந்து டி20 போட்டி அட்டவணை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். முதல் போட்டியானது வருகின்ற 2026 ஜூன் 26ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026 ஜூன் 28ம் தேதியும் நடைபெறும். இரண்டு போட்டிகளும் பெல்ஃபாஸ்டில் நடைபெறும்.
ALSO READ: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்
இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டி அட்டவணை
அயர்லாந்திற்குப் பிறகு, இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருடன் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. முதல் டி20ஐ போட்டி வருகின்ற 2026 ஜூலை 1ம் தேதி ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறும். இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10:00 மணிக்குத் தொடங்கும்.
2026 ஜூலை 1 – ரிவர்சைடு மைதானம் (இரவு 10:00 மணி முதல்)
2026 ஜூலை 4 – ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானம் (மாலை 7:00 மணி IST)
2026 ஜூலை 7 – டிரென்ட் பிரிட்ஜ் (இரவு 10 மணி முதல்)
2026 ஜூலை 9 – குளோசெஸ்டர்ஷயர் (இரவு 10:00 மணி IST)
2026 ஜூலை 11 – ஏஜியாஸ் பவுல் (மாலை 7 மணி IST)