Team India: 15 வயதில் டீம் இந்தியாவுக்கு தேர்வு.. சச்சினின் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி!
Vaibhav Sooryavanshi: இந்திய அணி 2026 ஜூன் மாத இறுதியில் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடும். இந்த 2 தொடர்களுக்கும் வைபவ் சூர்யவன்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வளர்ந்து வரும் நட்சத்திரமாக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 2025-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார். பின்னர், வைபவ் சூர்யவன்ஷி 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் இந்தியா ‘ஏ’ அணிகளுக்காக விளையாடி தனது முத்திரையைப் பதித்தார். தனது பேட்டிங்கால், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதில் வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றினார். மேலும், ஐபிஎல்-லின் 19-வது சீசனில் (IPL 2026) அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்யையும் வென்றார். தற்போது, வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயதிலேயே இந்திய சீனியர் அணியில் (Indian Cricket Team) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே வைபவ் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி,சர்வதேச கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
ALSO READ: சூர்யவன்ஷிக்கு அழைப்பு.. அயர்லாந்து, இங்கிலாந்து, ஆசிய போட்டிக்கான இந்திய டி20 அணியின் விவரம்!




16 வயதில் இந்திய அணிக்காக களம் கண்ட சச்சின் டெண்டுல்கர்:
A maiden #TeamIndia call-up at the age of 1️⃣5️⃣ 🌟
Congratulations to Vaibhav Sooryavanshi on setting a remarkable record 👏 pic.twitter.com/htOt9kci4p
— BCCI (@BCCI) June 6, 2026
1989-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சினுக்கு முதன்முதலில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. சச்சினுக்கு ஒரு வருடம் முன்னதாகவே வைபவ் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதன் மூலம், 37 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் படைத்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். மேலும், சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 71 நாட்களில் இந்திய அணியில் இருந்து முதல் அழைப்பை பெற்றுள்ளார்.
இந்திய அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இந்திய அணி 2026 ஜூன் மாத இறுதியில் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடும். இந்த 2 தொடர்களுக்கும் வைபவ் சூர்யவன்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த 2 தொடர்களிலும் உள்ள 7 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வைபவிற்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் தனது பெயரில் மற்றொரு உலக சாதனையைப் படைப்பார். ஆடும் லெவனில் உள்ள 7 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வைபவிற்கு வாய்ப்பு கிடைத்தால், சர்வதேசப் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிப்பார்.
ALSO READ: கே.எல்.ராகுல், கில் சதம்.. முதல் நாளில் 368 ரன்கள் குவித்த இந்திய அணி!
இதற்கிடையில், இந்திய அணி வருகின்ற 2026 ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும், இந்திய அணி இதை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக வருகின்ற 2026 ஜூலை 1 முதல் 11 வரை விறுவிறுப்பான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளன.