AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG: கே.எல்.ராகுல், கில் சதம்.. முதல் நாளில் 368 ரன்கள் குவித்த இந்திய அணி!

IND vs AFG Day 1 Highlights: முதலில், கே.எல். ராகுல் தனது 12வது டெஸ்ட் சதத்தை அடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கே.எல். ராகுல் இப்போது இணைந்துள்ளார்.

IND vs AFG: கே.எல்.ராகுல், கில் சதம்.. முதல் நாளில் 368 ரன்கள் குவித்த இந்திய அணி!
சுப்மன் கில் - கே.எல்.ராகுல் Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jun 2026 17:55 PM IST

இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) இடையிலான முல்லன்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சுப்மன் கில் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11வது டெஸ்ட் சதத்தை எட்டினார். அதேநேரத்தில், தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுலும் சதம் அடித்து அசத்தினார்.

ALSO READ: WTC புள்ளிப்பட்டியலில் இடம் பெறாத இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட்! காரணம் என்ன?

டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு:

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து விரைவில் ஆட்டமிழந்தார். இருப்பினும் கே.எல். ராகுல், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒரு பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர்.

டெஸ்ட் கேப்டனாக 1,000 ரன்களை கடந்த சுப்மன் கில்:

கேப்டனாக சுப்மன் கில் 15 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை எட்டினார். இருப்பினும், அதிவேகமாக ரன்கள் குவித்த சுனில் கவாஸ்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை. கவாஸ்கர் கேப்டனாக 14 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அதேசமயம் விராட் கோலி இந்த சாதனையை அடைய 18 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.

கில் மற்றும் கே.எல். ராகுல் சதம்:


முதலில், கே.எல். ராகுல் தனது 12வது டெஸ்ட் சதத்தை அடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கே.எல். ராகுல் இப்போது இணைந்துள்ளார். இந்தியாவுக்காக தொடக்க ஆட்டக்காரராக 33 டெஸ்ட் சதங்கள் அடித்த சுனில் கவாஸ்கரைத் தொடர்ந்து, வீரேந்தர் சேவாக் (22), முரளி விஜய் (12), மற்றும் தொடக்க ஆட்டக்காரராக தனது 11வது சதத்தை அடித்த கே.எல். ராகுல் ஆகியோர் உள்ளனர்.

இதற்கிடையில், சுப்மன் கில் தனது 11வது டெஸ்ட் சதத்தை அடித்து வரலாறு படைத்தார். கேப்டனாக 15 இன்னிங்ஸ்களில் இது கில்லின் ஆறாவது சதமாகும். இந்த சாதனை பட்டியலில் கில், சச்சின் டெண்டுல்கரை விட ஒரு சதம் மட்டுமே பின்தங்கியுள்ளார். சச்சின் கேப்டனாக 7 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். இருப்பினும், இந்திய அணிக்காக கேப்டனாக அதிக சதங்கள் அடித்த சாதனையை விராட் கோலி (20 சதங்கள்) வைத்துள்ளார். முதல் நாள் ஆட்ட முடிவில் ரிஷப் பண்ட்டும் தனது 19வது டெஸ்ட் அரைசதத்தை அடித்தார்.

ALSO READ: சூர்யகுமார் யாதவ் நீக்கம் ஏன்..? இந்திய தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கம்!

விக்கெட் எடுக்க போராடும் ஆப்கானிஸ்தான் அணி:

ஆப்கானிஸ்தான் அணிக்காக இதுவரை முகமது சலீம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முகமது சலீம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். சுதர்ஷன் 81 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். ஜியாவுர் ரஹ்மானும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ஆகியோரைத் தவிர, மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை விட்டு கொடுத்துள்ளனர்.

Follow Us