AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: காயத்தால் விலகிய கோலி.. மாற்று வீரராக ஜெய்ஸ்வால்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

IND vs AFG ODI series: ஐபிஎல் 2026ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இறுதிப் போட்டியின் போது விராட் கோலிக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, விராட் கோலிக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஜித் அகர்கர் அறிவித்தார்.

Team India: காயத்தால் விலகிய கோலி.. மாற்று வீரராக ஜெய்ஸ்வால்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விராட் கோலி - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jun 2026 15:21 PM IST

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) காயம் காரணமாக விலக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐயின் ஆண்கள் தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் உறுதிப்படுத்தினார். ஐபிஎல் 2026ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இறுதிப் போட்டியின் போது விராட் கோலிக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, விராட் கோலிக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஜித் அகர்கர் அறிவித்தார்.

ALSO READ: விராட் கோலிக்கு காயம்… இங்கிலாந்து தொடரையும் தவறவிடுவாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

கோலி காயம்:

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் விராட் கோலி 75 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். அதற்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த ஆட்டத்தின் போது, ​​கோலி முழு உடற்தகுதியுடன் இல்லாததால், பலமுறை பிசியோதெரபிஸ்ட்டின் உதவியை நாட வேண்டியிருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் பிசிசிஐ கோலியைச் சேர்த்திருந்தது. ஆனால் அவரால் அந்தத் தொடரில் விளையாட முடியாமல் போகலாம் என்று செய்திகள் வெளியாகின.

மாற்று வீரராக யஷஸ்வி ஜெயஸ்வால்:


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோலிக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 ஜூன் 13ம் தேதி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி 2026 ஜூன் 17ம் தேதி லக்னோவிலும் , 3வது போட்டி 2026 ஜூன் 20ம் தேதி சென்னையிலும் நடைபெறுகின்றன.

ALSO READ: சூர்யவன்ஷிக்கு அழைப்பு.. அயர்லாந்து, இங்கிலாந்து, ஆசிய போட்டிக்கான இந்திய டி20 அணியின் விவரம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா*, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா*, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித், கிருஷ்ணா, பிரார் குர்ரன்

ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த 2 ஜாம்பவான் வீரர்களும் முழு உடற்தகுதியை பெற்றால் மட்டுமே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியும். ரோஹித் சர்மா இன்னும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (பெங்களூரு)-விற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

Follow Us