AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: சூர்யகுமார் யாதவ் நீக்கம் ஏன்..? இந்திய தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கம்!

Suryakumar Yadav: டி20 கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகள் சூர்யகுமார் யாதவுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 2026 டி20 உலகக் கோப்பையில், சூர்யகுமார் யாதவ் 9 போட்டிகளில் ஒரே ஒரு அரைசதத்துடன் 242 ரன்கள் எடுத்தார். அதற்கு முன்பு, நியூசிலாந்து தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். ஆனால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும் சூர்யகுமார் யாதவ் சொதப்பினார்.

Team India: சூர்யகுமார் யாதவ் நீக்கம் ஏன்..? இந்திய தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கம்!
சூர்யகுமார் யாதவ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jun 2026 16:41 PM IST

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணிக்கு (Indian Cricket Team) வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ், இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டது மட்டுமின்றி அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 2026 ஜூன் 6ம் தேதியான இன்று, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ (BCCI) அறிவித்தது. இந்த 3 அணிகளிலும் சூர்யகுமார் யாதவின் பெயர் இடம்பெறவில்லை. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் எதிர்கொண்டு வருகிறது.

ALSO READ: சூர்யவன்ஷிக்கு அழைப்பு.. அயர்லாந்து, இங்கிலாந்து, ஆசிய போட்டிக்கான இந்திய டி20 அணியின் விவரம்!

சூர்யகுமார் யாதவ் நீக்கம்:


சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, இந்திய அணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் டி20 அணியின் புதிய கேப்டனாகியுள்ளார். சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதற்கு அவரது மோசமான ஆட்டமே முக்கிய காரணம். திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியும் முதல் முறையாக இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் குறிப்பிட்டார்.

இந்த முடிவு எளிதானது அல்ல..

இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், சூர்யகுமார் யாதவ் குறித்துக் கூறுகையில், “குறிப்பாக நாங்கள் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்த முடிவை எடுப்பது எளிதாக இருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு உலகக் கோப்பைக்குப் பிறகும், எதிர்கால உத்திகளையும், சிறந்த முடிவு எதுவாக இருக்கும் என்பதையும் பரிசீலிப்போம். வருகின்ற 2028 டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, இதுவே சரியான முடிவாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம்” என்றார்.

ALSO READ: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்.. பிசிசிஐ-யின் அதிரடி முடிவு!!

டி20 கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகள் சூர்யகுமார் யாதவுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 2026 டி20 உலகக் கோப்பையில், சூர்யகுமார் யாதவ் 9 போட்டிகளில் ஒரே ஒரு அரைசதத்துடன் 242 ரன்கள் எடுத்தார். அதற்கு முன்பு, நியூசிலாந்து தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். ஆனால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும் சூர்யகுமார் யாதவ் சொதப்பினார். வெற்றி சதவிகிதத்தின் அடிப்படையில், சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டி20 கேப்டன் ஆவார். சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு 52 போட்டிகளில் கேப்டனாக இருந்து, அவற்றில் 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். கேப்டனாக சூர்யாவின் வெற்றி சதவிகிதம் 82 ஆகும். இது மிகவும் சாதனைக்குரியதாகும்.

Follow Us