நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஒரே நாளில் ரூ. 2,160 குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold and Silver Price: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,230 ரூபாயாகவும், ஒரு சவரன் 1 லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 14,433 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 15 ஆயிரத்து 464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜுலை 24, 2026: கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 270 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், இன்று 2,000 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 2,160 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று 5 ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,230 ரூபாயாகவும், ஒரு சவரன் 1 லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 14,433 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 15 ஆயிரத்து 464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: மீண்டும் 4,000 டாலர்களை கடந்த தங்கம்.. கடும் விலை உயர்வை எதிர்க்கொள்ள போகும் இந்தியா?
தங்கத்தின் விலை ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். நிலையற்ற தன்மை இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் – தங்கம் விலையில் மாற்றம்:
குறிப்பாக, பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தங்கத்தின் விலையில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தனது அடுத்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கடைகளில் நீங்கள் சரியான விலைக்கு தான் தங்கம் வாங்குகிறீர்களா?.. எப்படி தெரிந்துக்கொள்வது?
அதேபோல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாகவும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான கவனத்தை சற்று குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க இது சரியான நேரம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.