மதுபோதையில் பள்ளிப் பேருந்தை இடித்துக் கவிழ்த்த லாரி ஓட்டுநர்.. நூலிழையில் தப்பிய குழந்தைகள்.!
Pollachi school bus accident: பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வந்த லாரி ஓட்டுநர் பள்ளிப் பேருந்தை இடித்துக் கவிழ்த்ததில் வேனில் இருந்த பிஞ்சு குழந்தைகள் மயிரிழையில் உயிர்தப்பிய நிலையில், தப்பியோடிய ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரியைக் பறிமுதல் செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி, ஜூலை 23: பொள்ளாச்சி அருகே மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கேரளா மாநில லாரி ஒன்று, பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து மீது பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் பள்ளி வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், வேனில் இருந்த பிஞ்சு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பினர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய போதை லாரி ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துத் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us
Latest Videos
