AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ind vs Zimb : 15 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் குவித்த அதே மைதானம்… மீண்டும் அதிரடி காட்டுவாரா வைபவ் சூர்யவன்ஷி?

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. ஹராரே மைதானத்தில் நடைபெறும் சில மாதங்களுக்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 15 பவுண்டரிகள், 15 சிக்சர்கள் என 175 ரன்கள் குவித்தார்.

Ind vs Zimb : 15 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் குவித்த அதே மைதானம்… மீண்டும் அதிரடி காட்டுவாரா வைபவ் சூர்யவன்ஷி?
வைபவ் சூர்யவன்ஷி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Jul 2026 16:26 PM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் ஜூலை 23, 2026 இன்று நடைபெறுகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 டி20 தொடர்களிலும் இந்தியா அணி படுதோல்வி அடைந்ததது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதனையடுத்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சூர்யவன்ஷியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றார். 15 வயதே ஆன அவரின் அதிரடி ஆட்டம் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் கடைக்கோடி ரசிகர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிக்க : IND vs ZIM: ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி.. ஹராரே பிட்ச் யாருக்கு சாதகம்?

வைபவ் மீது எகிறும் எதிர்பார்ப்பு

அதனைத் தொடர்ந்து தம்புள்ளாவில் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக சதம் விளாசி மீண்டும் தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியில் அவரது ஆட்டம் தான் அவருக்கு இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையானது. இந்த நிலையில் 3 வது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

இந்தப் போட்டியில் அவர் அறிமுகமானபோது அவரது வயது, 15 வயது 100 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக அறிமுகமான இளம் வீரர் என்ற புதிய சாதனையை சூர்யவன்ஷி படைத்தார். இதன் மூலம் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் சாதனையையும் அவர் முறியடித்தார். இருப்பினும் அவர் அந்த தொடரில் 13, 13 மற்றும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் விளையாட முடியவில்லை.

இதையும் படிக்க : IND vs ZIM: இந்தியா – ஜிம்பாப்வே முதல் டி20 போட்டி எப்போது..? தேதி, நேரம், நேரலை விவரம்!

மீண்டும் அதிரடி காட்டுவாரா வைபவ் சூர்யவன்ஷி?

இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெறும் நிலையில் அதே மைதானத்தில் கடந்த 2026, பிப்ரவரி மாதம் 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 15 பவுண்டரிகள் 15 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

அதே அதிரடியான ஆட்டத்தை மீண்டும் அதே மைதானத்தில் சூர்யவன்ஷி வெளிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பாரத்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய வைபவ், இந்த மைதானம் எனக்கு மிகச்சிறப்பானது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முன் தான் இங்கு உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்தோம். தற்போது மீண்டும் இந்திய அணிக்காக இதே மைதானத்தில் விளையாடுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

Follow Us