டெல்லியில் இருந்து வந்த அவசர உத்தரவு.. அமித் ஷாவின் புதுச்சேரி பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்!
Union Home Minister Amit Shah: புதுச்சேரியில் காவல் துறைக்கு ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருந்த நிலையில், திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த காரணத்தை இந்தப் பதிவில் அறியலாம்.
புதுச்சேரி மாநில காவல்துறைக்கு குடியரசு தலைவரின் உயரிய விருதான வண்ண விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்க இருப்பதாகவும், இதற்காக அவர் வருகிற ஜூலை 25 – ஆம் தேதி புதுச்சேரி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில காவல் துறையின் உயர் அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரியில் நடைபெற உள்ள ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் வருகைக்கான மாற்று தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். காவல் துறையில் நீண்டகால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை திடீர் ரத்து
இந்த விருது வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் புலி டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!




வன்முறையில் முடிந்த நீட் எதிர்ப்பு போராட்டம்
இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜூலை 20 – ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து முயன்ற போது வன்முறையாக மாறியது. இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்பி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு போராட்டத்தால் அமித் ஷா வருகை ரத்து
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனை தொடர்பான போராட்டத்தின் காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: வீதியில் இறங்கிய மாணவர்கள்.. தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்.. தமிழகம் முழுவதும் தீவிரமடைந்த நீட் போராட்டம்!!