Team India: கேப்டன் பதவி இழப்பு! முதல் முறையாக மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்.. வைரலாகும் பதிவு!
Suryakumar Yadav: இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், சூர்யகுமார் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மோசமான ஆட்டமே முக்கிய காரணம் என்று கூறினார். 2026 டி20 உலகக் கோப்பையில் சூர்யா ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். அதற்கு பிறகு, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி முதல் முறையாக இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) கேப்டன் பதவியை இழந்ததோடு, இந்திய அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் (BCCI) இந்த முக்கிய முடிவு குறித்து சூர்யகுமார் தனது முதல் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்கு சூர்யகுமார் யாதவ் சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தது தொடர்பாகவும் முக்கிய கருத்தை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ALSO READ: கேப்டன் பதவி போனால் என்ன? ரன் மழை பொழிந்த சூர்யகுமார்.. அதிரடி ஆட்டம்!




புதிய டி20 கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்:
இந்திய அணி வருகின்ற 2026 ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அங்கிருந்து, 2026 ஜூலை மாதம் இங்கிலாந்துக்குப் புறப்படும். இரு தொடர்களுக்குமான அணிகளை பிசிசிஐ நேற்று அதாவது 2026 ஜூன் 6ம் தேதி அறிவித்தது. சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் கருத்து:
Suryakumar Yadav congratulated Shreyas Iyer after the latter replaced him as India’s T20I captain ahead of the new cycle.
Despite losing captaincy and his T20I spot, Suryakumar said he feels proud seeing Mumbai players leading India’s T20 team. pic.twitter.com/WTsuVkO1mF
— Mid Day (@mid_day) June 7, 2026
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு, தனது கேப்டன் பதவியையும் இழந்தபோதிலும், சூர்யகுமார் யாதவ் நல்ல மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அதன்படி, தனது இன்ஸ்டாகிராமில் 2 ஸ்டோரி அப்டேட்களைப் பதிவிட்டார். முதலில், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “திறமையான இந்த அணிக்கு, வரவிருக்கும் சவால்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என்று தலைப்பிட்டிருந்தார்.
இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், சூர்யகுமார் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மோசமான ஆட்டமே முக்கிய காரணம் என்று கூறினார். 2026 டி20 உலகக் கோப்பையில் சூர்யா ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். அதற்கு பிறகு, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி முதல் முறையாக இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றிலேயே மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
ALSO READ: இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கும் 3 பெரிய சவால்கள்!
இதனை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு சிறப்புச் செய்தியை அனுப்பினார், அதில், “கடின உழைப்பின் மூலம் இந்த வாய்ப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள். உங்கள் எதிர்காலப் பயணத்தைக் காண நான் ஆவலாக உள்ளேன்” என்று எழுதியிருந்தார்.